கனவு

ஒர் சொப்பனம்

கண்கள் மூடி உறங்கி
கொண்டிருந்தேன்
ஓர் நீண்ட ரயில் பயணம்
நான் மட்டுமே பயணிக்க

என் அருகே ஒரு தோழியும்
பயணித்தால்
முதலில் பயத்துடன் ஊரை
கேட்க
அவளோ என் பெயரை
கேட்க
நான் அவளின் படிப்பை
கேட்க
அவளோ என் முகவரி கேட்டாள்
இருவரும் தெரிந்தவர்கள் போல
பேசி கொண்டு இருக்க
அவளின் கைபேசியில் ஒரு
அழைப்பு வந்தது
மிகவும் நெருக்கமாக பேசி
துண்டித்தாள் அழைப்பை,

பின் இவர் தான் என்
கணவர் புகைப்படம் காண்பிக்க
பதறியவள் ஒரு கணம்
தன்னுள் தன் அழுகையை
புதைத்து
தன்னை ஏமாற்றியவன் தன்
ரயில் பயண தோழியின்
கணவன்

சிரித்து கொண்டே வாழ்த்துக்கள் கூறி
நான் இறங்கும் இடம் வந்து
விட்டது.
நீங்கள் தொடர்ந்து பயணம்
செய்யுங்கள் வாழ்க்கை முழுவதும்.......

சொப்பனம் கலைந்தது.....

எழுதியவர் : உமா மணி படைப்பு (30-May-18, 9:48 am)
Tanglish : kanavu
பார்வை : 494

மேலே