தமிழ் செல்வமே

தமிழே உன்னை படிக்க படிக்க மெய் மறந்து போனேனே
தமிழே உன் கவிநயம் காணக்காண அந்தக்கவியோடு ஒன்றிப்போனேனே
தமிழே உன் இலக்கியம் இலக்கணம் கற்க கற்க மேன்மை அடைகிறேனே
தமிழே நீ ஆழ்கடலிலும் ஆழமல்லோ
ஆழ்கடலில் முத்தெனவே எடுக்க முடியாதே
தமிழென்னும் அமிழ்தை ஒரு துளியேனும் பருக முயல்கிறேனே
தமிழ்ச்செல்வமே
நவரத்தினங்களும் உன்னினும் மேலில்லை
நீ அருஞ்செல்வம்
திகட்டா பெருஞ்சுவை
உன்னை வியக்க இப்பிறவி போதாதே
மேலும் வேண்டுவேன் பல பிறவி
உம்மை நோக்கி பிழைக்க வந்தால் நீ
ஒரு போதும் தனித்து விட்டதில்லை
அவர்களையும் உனது பிள்ளைகளென கொண்டாயே
அறிவு செல்வத்தை உம் ஓசையில் ஊட்டுவித்தாய்
உம்மை எம் உணர்ச்சிகளில் ஒன்றாக கொண்டேன்
என் அறிவில் ஒன்றாக கொண்டேன்
என் செவிப்பறையில் மீண்டும் மீண்டும் இசைக்கும் இசையென கொண்டேன்
என் நவரசங்களில் ஒன்றாய் கொண்டேன்
உன சொல் வளம் என் செல்வ வளமென கொண்டேன்
உன்னையே என் உறவெனக்கொண்டேன்
நீ என் செல்வமென ஆனாய்
மீண்டும் நீ என் உயிரென ஆனாய்
என் தமிழ் என்னும் செல்வமே
போதும் போதும் என்று ஒருபோதும் சொன்னதில்லை
உன்னை கற்கும் போது
நிறுத்து நிறுத்து என்றும் ஒருபோதும் நிறுத்தியதில்லை
உன்னை கற்றுகொடுக்கும் போது
தமிழே
நீ என்றும் எங்கள் செல்வமென்று
எங்கள் நெஞ்சில் எழுதிடுவோம்
தமிழே உன்னை எங்கள் மூச்சென
கருதிடுவோம்
எங்கள் உயிருள்ள வரை உனது ஒரு சொல்லையும் இழக்க விடமாட்டோமே எம் தமிழே எம் தமிழ்ச்செல்வமே

எழுதியவர் : பிரகதி (3-Jun-18, 7:38 pm)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 1120

மேலே