பாட வேண்டுமே – அம்சநாதம்

M.M.தண்டபாணி தேசிகர் இயற்றி, அம்சநாதம் ராகத்தில் பாடிய ஒரு அருமையான பாடல் ’பாட வேண்டுமே’. நேற்று காலையில் உறவினரொருவர் இல்லத் திருமணத்தில் நாதசுர வல்லுநர்கள் கருப்பட்டி சகோதரர்கள் இராசேந்திரன் குழுவினர் இப்பாடலை இனிமையாக வாசித்ததை இரசித்தேன்; அவர்களைப் பாராட்டினேன். பாடல் கீழே:

பல்லவி

பாட வேண்டுமே
இசை பாட வேண்டுமே - தமிழ்
இசைப் பாவின் பொருளை நன்குணர்ந்து (பாட)

அனுபல்லவி

ஆடும் கூத்தன் அடியை நினைந்து
அன்பினாலகம் கனிந்து கனிந்து (பாட)

சரணம்

குழலும் யாழும் ஒன்றாய்க் கூட்டி
குரலை அதனுள் நன்றாய் ஏற்றி
முழவின் துணையால் தாளம் காட்டி
மூன்று தமிழின் முறையை நாட்டி (பாட)

யு ட்யூபில் இப்பாடலை தண்டபாணி தேசிகர் மற்றும் சஞ்சய் சுப்பிரமணியன் பாடியதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jun-18, 8:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 85

சிறந்த கட்டுரைகள்

மேலே