இறந்தும் வாழ்பவன்

பள்ளி கூட மணி அடித்தது.பட்டாம்பூச்சிகள்
சிறகை விரித்து பறப்பது போல மாணவர்கள் வகுப்பறையில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளி வந்தனர்.அதில் துரை என்ற பத்தாம் வகுப்பு மாணவன் தன் நண்பர்களோடு உரையாடி கொண்டு
அவனும் வீட்டிற்கு செல்ல புறப்பட்டான்.
அவன் படிப்பில் ஆர்வம் மிகுந்தவன்.
அவன் அக்கா தான் அவனை படிக்க வைக்கிறாள்.அம்மா வீட்டில் இருப்பவர்கள்.அப்பா இல்லை.அவன் தம்பி ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்.
அக்கா பத்தாம் வகுப்பு வரை படித்தவள்.வேலைக்கு போய் அவள் சம்பாத்தியத்தில் வீட்டு நிலை ஒடுகிறது.தம்பிகளுக்கு எந்த குறையும் தெரியாமல் வளர்த்து வந்தாள்.
வேலைக்கு போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அக்கம் பக்கம் துணிகள் தைத்து தருவாள்.
துரையும் ஏழாம் வகுப்பில் இருந்தே
விடியற்காலை பேப்பர் போடுவான்.
பள்ளிக்கு போய் வந்ததும் இரண்டு மணிநேரம் மட்டும் மாலையில்
மிதிவண்டி மூலம் இரு மைல் தொலைவில் உள்ள மருத்துவமனையில் டோக்கன் தரும் பணி செய்து வந்தான். மருத்துவர் துரையை 14 வயதுக்கு மேல் மட்டுமே வேலைக்கு சேர்பேன் உன்னை சேர்க்க முடியாது என கூற குடும்ப நலனுக்காக கெஞ்சி அந்த வேலையை பெற்றான்.மருத்துவர் நீ இங்கேயே புத்தகம் எடுத்து வந்து படி
நான் உனக்கு படிப்பில் உதவி செய்கிறேன் என கூறி தான் சேர்தார்.
பணி முடிந்து ஒரு மணி நேரம் படித்து முடித்து வீடு திரும்புவான்.
அவர் துரைக்கு சில சமயங்களில் படிப்பிலும் உதவுவார்.பணம் சிக்கலிலும் உதவுவார்.
இப்படி அவன் வேலை செய்து தன் அக்காவிற்கு கஷ்டங்களில் பங்கு கொண்டு குடும்ப சூழலை மனதில் கொண்டு படித்தான்.
பத்தாம் வகுப்பு என்பதால் மருத்துவர் நீ வெகு தூரம் வந்து போகாதே வீட்டிலேயே படி என்று அறிவுரை கூற இல்லை ஐயா,எனக்கு பாடத்தில் சந்தேகம் வந்தால் உங்களிடம் கேட்பேன் நீங்கள் உடனே தீர்த்து வைப்பீங்க.
வீட்டில் படித்தால் அக்கா வரவும் அவள் வேலையில் என் சந்தேகத்தை
தீர்க்கவும் மாட்டாள் அவள் சொன்னாள் அவ்வளவு எளிதில் புரியாது என்று கூறினான் துரை.
சரி என்று இது தொடர. அன்று
அரையாண்டு தேர்வு படிப்பில் ஆர்வம் கண் விழித்து படித்து இருந்தான். முதல் இரண்டு தேர்வுகள் முடித்தான். பின் மருத்துவர் உதவி கொண்டு தேர்வு முடிந்தது.
கடைசி தேர்வு முடிந்தது மருத்துவரிடம் வழக்கம் போல பணிக்கு சென்றான். மிகவும் சந்தோஷமாக நான் தான் முதல் மதிப்பெண் வாங்க போறேன் அடுத்து என்ன படிக்கலாம் அக்காவுக்கு படித்து முடித்ததும் கல்யாணம் பண்ணணும்.தம்பியை நல்லா படிக்க வைக்கனும்.அம்மாவை நல்லா பாதுக்கனும்.என மனதில் நினைத்து
கொண்டே மிதிவண்டியில் வந்து கொண்டு இருக்கும் போது வழியில் ஒரு லாரி யார் தவறு என்று தெரியாமல் கண் இமைக்கும் நேரத்தில் விபத்து உயிருக்கு போராடும் நிலையில் துரையை ஊர் மக்கள் அந்த மருத்துவ மனையில் சேர்த்தனர்.
மருத்துவர் அவனை பார்த்ததும்
அதிர்ந்தார்.பின் காப்பாற்ற முயன்றும் முடியாத நிலை அவன் அக்கா, தம்பி ,அம்மா கதறினர்.
இறுதி நிமிடங்கள் அவனுக்கே தெரிந்து விட்டதோ என்னவோ.....
அனைவரும் சூழ்ந்து இருக்க
அக்காவையும்,மருத்துவரையும்
பார்த்து மனதில் நினைத்ததை கூறி வருத்த பட்டான்.அக்கா உனக்கு உதவாமலே போக போறேன்.அழ கூடாது தைரியமாக இரு கூறி விட்டு
"எனக்கு ஒரு ஆசை நான் இறந்தால்
என் உடல் உறுப்பில் எவை பயன் பெறுமோ அவை தானமாக அளித்து விடுங்கள்" என்றான்.
விபத்தின் அவன் உடலில் காயங்கள்
இல்லை ஆனால் மண்டையில் அடிப்பட்டு இரத்த போக்கு தொடர்கிறது.அவன் சொல்லி முடித்ததும் இறந்து விட்டான்.
அவனை நினைத்து மருத்துவர் பெருமை பட்டார்.அவன் அக்கா தம்பி என கதறி அவனை இழந்த சோகங்கள் அவனின் ஆசை படி அனைத்தும் நடந்தது.விபத்து என்பதால் லாரிகாரனிடமிருந்து போலிஸ் நஷ்ட பணம் கொஞ்சம் வாங்கி அந்த குடும்பத்திற்கு கொடுத்தது.
நாட்கள் கழிந்தன பத்தாம் வகுப்பு
முடிவுகள் வந்தது.
துரை மாநில அளவில் முதல் மதிப்பெண்.
அவன் வீட்டிற்கு பத்திரிகை காரர்கள்
வர, அவள் அக்கா பேட்டி கொடுத்தாள்.
அவன் வாழும் போதும் கஷ்டங்கள் கொடுக்க வில்லை.
அவன் இறந்த பிறகு எங்களுக்கு பண உதவி, முதல் மதிப்பெண்
எடுத்து பெருமைபடுத்தி சென்றுள்ளான்.
மேலும் அவன் உடல் உறுப்புகளை தானம் செய்து இறந்தும் வாழ்கிறான்.
மாணவர்களுக்கு உதாரணமாக
மறைந்தும் வாழ்கிறான்.....
என்றாள்

எழுதியவர் : உமா மணி படைப்பு (4-Jun-18, 9:46 am)
சேர்த்தது : உமா
Tanglish : iranthum valbavan
பார்வை : 265

மேலே