காதல்

நீ சொல்லிவிட வேண்டுமென்ற
என் எதிர்பார்ப்பிற்கும்
சொல்லக் கூடாதெனும்
உன் பிடிவாதத்திற்குமிடையே
ஒரு கால்பந்தைப்போல
அங்குமிங்கும் உதைபட்டு
சீரழிகிறது
சொல்லாத நம்காதல்.

மௌனத்தின் மைதானங்களில்
விளையாட்டாய்ப்போன
நம் காதலின் ஊடல் இறுதியில்
ஒரு கல்யாண மண்டபத்தில்
வெற்றியைக் கைப்பற்றலாம்
தோற்றவர் யாருமின்றி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Jun-18, 11:03 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kaadhal
பார்வை : 273

மேலே