பிராந்தம்

எதையும்
பிரித்தெடுக்க முடியாததுபோல,
காதலும், நேசமும்,

சன்னமாய் நேர்த்த நூலை
நீளவாக்கில்,
பொறுமையாய்ப் பிரித்தெடுப்பதைப்போல
இருபுறமும் பிரித்து
அவற்றை திசைத்திருப்பி விடுகிறது காலம்,

கண்ணும் கருத்துமாய்
பார்த்துக்கொண்டிருந்த உடமைகளில் ஒன்று
எத்தனை எழுப்பமாய்
மற்றொருவருடைய பிரியங்களுக்குள்ளாகி
கைவிட்டுப்போகிறது,
ஒரு தொலைதலுக்குப்பின்னால்,
எத்தனை எழுப்பத்தில்
வேறொரு உடமையின்மேல்,
கண்டதும் என் கண்களோ மனமோ
விலைப்போகிறது,
நான் கற்றுக்கொள்வதும் அங்கிருந்துதான்,

கலீல் ஜிப்ரான்
இங்ஙனம் சொல்கிறார்

""எனக்கு,
அதிக காலம் இருந்திருந்தால்
காட்டில் வசித்திருப்பேன்
ஆனால்,
துர்பாக்கியம் என்னை
இடைவழிகளிலேயே இழுக்கிறது
இங்கிருந்து இனி நாம் யாத்திரை செய்வது
இந்த இடைவழிகளூடே ஆகும்,
சதியும் துரோகங்களும் நிறைந்த இடைவழிகளூடே,"""

ஒரு நோட்டம், ஒரு வார்த்தை,
ஒருவேளை
அங்கேயிருந்துதான்
காதல், கடந்து வருவது இருக்கலாம்

ஒரு ஒரு ஆணும்
என்னை நேசிக்கத் தொடங்குவது,
தான் எங்கு நிற்கிறான்
என்னும்
அளவு தெரியாத
அந்த மைய்யப்புள்ளியிலிருந்து தான்

ஒரு ஒரு
ப்ரணய நிமிஷத்திலும்
அவர்களுடைய மனதிற்கு
நான் மற்ற யாராகவோ
தெரிந்துகொண்டிருக்கிறேன் போல்

அப்படித்தான்,
யாரோ அவனை நான் எத்திச்சேரும்போது,
என்னை நேசித்த அவன்களில்
அவன் ஒருவனாகி தொலைந்திருப்பான்

இப்படி, முகங்கள் மாறி மாறி.
முடிவில்
முதலாவதவனிடமே
கொண்டுச் சேர்க்கிறது காலம்

காரணம்

காதல்
அசாந்தமான மறுபூமியுடைய
பிராந்தமான
அலைச்சலாகும்
எதிர்பார்ப்புகளுடைய முள் முனையில்,
தென்படாத அகலங்களில்,
மறுப்பச்சை போல
காத்திருக்கலாம்
இனியும் எத்தனையோப்பேர்

ஆண் தேவதை

எழுதியவர் : Anusaran (6-Jun-18, 12:46 am)
பார்வை : 98

மேலே