மதுர நாயகி

ஊருக்கே பேரழகி அவள்
தேவதாசி மகள் -அவள்
பார்வை கார்மேகனாய்
அந்த ஊர் கோயிலில்
குடிகொண்டுள்ள கண்ணன்
ஒருவனை அன்றி வேறொன்றும்
அறிந்ததில்லை - அவள் பாடல்
அந்த கண்ணனை அன்றி வேறோர்
தெய்வத்தையும் பாடியதில்லை
அவள் ஆடலுக்கு ராணி ,ஆயின்
அவள் ஆட்டம் காண்பவர்க்கு
கண்டவுடன் சொல்லிவிடும் அது
அந்த கண்ணனுக்கே அவள்
கேட்பது அவன் குழலோசையோ
அப்படிதான் இருக்கவேண்டும்
ஏனெனில் அதில் விரகதாப
அபிநயம் இருந்தும் அது
அவள் நாயகன் கண்ணனுக்கு மட்டுமே
அவள் தன்னை,கண்ணனின் மையலில்
மயங்கிய ராதை என்றே நினைத்தாள் போலும்

அன்று அந்த ஊர் கோயிலில் தேர்த்திருவிழா
தேரில் கண்ணன் கம்பீரமாய் பவனி,
தேரை திரள் திரளாய் ஊர்மக்கள்
'ஹரே கிருஷ்ணா' என்றும், 'கோவிந்தா'
என்றும் பரவசத்தில் இழுத்து வர
ஒய்யாரமாய் தேரின் பவனி தேரில்
கண்ணபிரான்....................

தேரின் முன்னே , அவள் அந்த நர்த்தகி,
தேவதாசி மகள் வித விதமாய் தன்னை
மறந்து ஆடி வந்தால்........ஒரு கட்டத்தில்
அவ்ளகோலாட்டம், அதில் அவள்
தன்னோடு கண்ணனே ஆடுவதாய்
நினைத்து ஆடிவந்தாள்....................

தேர் திரும்பியது, மீண்டும் கோவில்
வாசலை நோக்கி ................அப்போது
யாரும் எதிர்பார்க்காத போது, அந்த
ஆடல் அழகி, தேவதாசி மகள்
மயங்கி வீழ்ந்தாள்............ தேரின்
முன் சக்கரம் உரசி நின்றது..........
ஊர் மக்கள் திரண்டு வந்து
அவளை சட்டென்று விலக்கி
அவள் நாடியைப் பார்க்க, அவள்
உயிர் பிரிந்தது தெரிந்தது.............
அது அன்று கண்ணனின் ஜென்மாஷ்டமி
தினத்தில் அவன் பாதம் வருட
அவனைத் தஞ்சமடைந்ததோ?.............
என்னைப்போல் அவளை அறிந்திருந்த
ஊர் மக்கள் அப்படித்தான்
நினைத்தனர்.......................

அவள் தாசி அல்ல, அந்த
மாதவனுக்கு மட்டுமே தன்னை
அர்ப்பணித்துக் கொண்ட நாயகி
மதுர நாயகி அவள் பெயர் ..............

ஊர் மக்கள் மனதில் அவள்
கண்ணனின் ராதையே .........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Jun-18, 3:15 pm)
Tanglish : mathura naayaki
பார்வை : 133

மேலே