அன்புத் தோழியே

பல்லாண்டு கால பள்ளி நட்புக்களில்..,
பனித்துளியாய் தூவப்பட்ட நம் அன்றாட பதிவுகள்...,
இன்றும் நினைவோடு தான் உலாவருகிறது...!
டம்ளருக்குள் ஒளிந்து போன நிலவாய்...,
சுருங்கிப் போன இலைக்குள் மறைந்து விட்ட பனிச் சிதறலாய்..,
மேகத்தின் நடுவே கண்ணாம்பூச்சி ஆடும் விண்மீனாய்..,
புராணங்களில் தவறப்பட்ட காவியங்களாய்..,
பொக்கிஷமாய் பூட்டிவைத்தேன் உன் நட்பின் கவிதைத் தொகுப்பை..!
உன் புன்னகையை மட்டும் சிறைபிடிக்கவில்லை..,
நம் நட்பெனும் பயணக் குறிப்பு..!
உன் துன்பங்களின் பக்கங்களையும் அனுபவமாய் சிறை பிடித்தது நம் பள்ளி நாட்களின் நாட்காட்டி..!
இன்றும் மறக்கவில்லையடி உன்
இமைகளில் அடிக்கடி கசியும் துளிகளும்..,
அதில் சற்றே கரைந்த என் மனமும்..!,
அவை நட்புவட்டத்தால் புன்னகையாய் மாற்றப்பட்ட சில கணங்களும்..!
நான் வேண்டுவது உன் இருள் சூழ்ந்த வாழ்வில்..,
சூரியக்கதிர்கள் மட்டுமே..!
அன்புத் தோழியே
கோடி அர்த்தங்கள் நிறைந்த என் தூய்மை அன்புடன்.., பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

எழுதியவர் : சரண்யா (7-Jun-18, 6:21 am)
Tanglish : anbuth thozhiye
பார்வை : 734

மேலே