கண்ணீர் ....!
துடைக்கும் கைகள்
தடுக்க மறந்தால்
படைக்கும் இரவுகள்
பலியாகிவிடும் என்பதால்
மறைக்கும் துன்பங்கள்
கரிக்கும் உப்பாய்
வடிக்கும் நீரில்
கரைந்து போவதால்
துடிக்கும் இதயம்
மகிழ்கிறது ...
இதை படைக்கும்
இறைவன் உடைக்கும்
சட்டமாய் கட்டிவைத்து
சென்றதால் தொட்டில்
முதல் கட்டில் வரை
எட்டி பார்க்கிறது கண்ணீர் ....!