401 இரந்தும் ஏழைகளுக்கு நல்லோர் ஈவர் - கைம்மாறு கருதா உதவி 19

கலி விருத்தம்

காரி டத்திரந் தேனுங் கயநதி
நீரி னைப்பணை யெங்கு நிறைத்தல்போல்
யாரி டத்திரந் தேனு மறமுளார்
பாரி டத்துப் பகுப்பர் வறிஞர்க்கே. 19

- கைம்மாறு கருதா உதவி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”குளமும் ஆறும் மழையிடம் வேண்டிப் பெற்றேனும் நீரை வயல்களெங்கும் நிறைத்து வைக்கும்.

அதுபோல், நன்மை நாடும் நல்லோர்கள் யாரிடமாகிலும் வேண்டிப் பெற்று இவ்வுலகத்தில் ஏழைகள் இருக்கும் இடத்தைத் தேடிப் போய் பகுத்து அளிப்பார்கள்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

கார் - மழை. இரத்தல் - வேண்டிப்பெறுதல்.
கயம் - குளம். பணை - வயல். அறம் - நன்மை.
பார் - உலகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jun-18, 8:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே