அவள்தானே

அன்பே
சில நாட்கள் அறிமுகமான
நண்பர் ஒருவரின்
அழைப்பை ஏற்று
முன்பின் அறிய ஊர் ஒன்றில்
உள் நுழைந்தேன்.....

திரும்பும் இடமெல்லாம் எழில் பொங்கும்
விழாக் கோலம் கொண்டு
யாழிசையில் இதயம் மயங்கும்
ஒளியோசையில் அனைவரும்
சங்கமித்தனர்!

ஆயிரம்பேர் அடங்கிய
கூட்டமொன்றில் அறிமுகமில்லாமல்
நான் அலைந்துக்கொண்டிருந்தேன்!
அத்தனை கூச்சல்களின் மத்தியில்
குயில் ஒன்றின்
குரலிசையைக் கேட்டேன்....

எங்கோ
யாரையோ அழைத்த
அழைப்பொன்று என் செவிகளை
சேரும் முன்பே --- செங்குருதி ஓடும்
இதயத்தை வருடங்கள் கழித்து
வருடி எழுப்பியது!!

சிந்திக்க நேரம்
இருந்து இருந்தால்
"அவள்தானே" என்று
நிச்சயம் அறிந்து இருப்பேன் -- ஆனால்
கண்கள் சந்தித்துக் கொண்டதால்!
சிந்திக்க நேரமின்றி
சிதைந்து விட்டேன்!!

மாநிற மேனியில்
மச்சம் கொண்ட முகத்தில்
மஞ்சளிட்டு....

மென்மையான திலகத்தை
நெற்றியில் வைத்து....

தலையில் பூச்சூடி
அங்கமெல்லாம் பொன்நகை அணிந்து
புன்னகை எழில் குறையாமல்!
சிலையாக ஒருத்தி
பட்டாடை உடுத்தி
சிரித்துக் கொண்டு வந்தாள்....

அவளை தொலைவில்
கண்டபோதும்
தொலையாத ஞாபகம் ஒன்று
தொடர்ந்து என்னை தொல்லைபடுத்தியது!

என் வானில் மட்டுமே
வலம் வரும் "வெள்ளி நிலவு" என்று
நினனத்தவன் -- அது
எவர் வானிலோ
நிரந்தரமாக நிலைபெரும் என்று
நினைத்துப் பார்க்க தவறிவிட்டதை!
நான் அப்போது
நினைத்துப் பார்த்தேன்!!

அன்று
கண்கள் தீண்டியதால்
கனவுகள் வளர்ந்தது....

கனவுகள் வளர்ந்ததால்
காயங்கள் முதிர்ந்தது.....

காயங்கள் முதிர்ந்ததால்
காலங்கள் மருந்தானது....

காலங்கள் மருந்தானதால்
அது
கடமைகளை செய்ய வேண்டிய
வழியானது...........

விழாவிற்கு விருந்தாளியாக வந்தவன்
விதிக்கும் விருந்தாளியாகிவிட்டேன்
அது விதைத்த
விடுகதைக்கும் விடையாகிவிட்டேன்!!!

மறந்து போன நினைவொன்றை
மஞ்சள் மலரே உன்
மஞ்சள் முகம்
மறுபடியும் நினைவுபடுத்திவிட்டது...

காலத்தின் கடமை பசிக்கு
என் உண்மை காதல்
உணவாகிவிட்டது...

எண்ணி எண்ணி
வாழ்ந்த நாட்கள்
எல்லாம் ஏமாற்றமாகிவிட்டது....

எல்லாம் விதியின் விளையாட்டுகள்
என்று வீடு திரும்பிவிட்ட போதும்!
காவியங்களின் ஏடுகளை
கண்ணீர் நனைத்துக் கொண்டிருக்கின்றது
உயிரே
நாம் பழகிய நாட்களை எண்ணி...!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (9-Jun-18, 8:08 pm)
Tanglish : avalthaane
பார்வை : 802

மேலே