446 ஓட்டைக் குடநீர் போல் உடல் உயிர் உறல் வியப்பு – துன்பம் 12

கலித்துறை

பஃறு ளைக்கடம் பாணியைத் தாங்குவ தரிதே
எஃகு பஃறுளைச் சடத்துயி ரிருக்கையு மியைசீர்
அஃகிப் பல்பட ரணுகுறா மையுமதி சயமாம்
இஃது னார்துயர்க் கிடைந்துறு வாரிறும் பூதே. 12

- துன்பம்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்


”பல துளைகளையுடைய குடம் தண்ணீரை ஒழுக விடாமல் தன்னகத்து வைத்துக் கொண்டிருக்க முடியாது.

அதுபோல, நுண்மையான பல ஓட்டைகளை யுடைய உடலில் உயிர் தங்கியிருப்பதும், நெருங்கிப் பல வகைத் துன்பங்கள் சேராதிருப்பதும் வியப்பாகும்.

இதைச் சிறிதும் கருதாது துன்பத்திற்கு மனந் தளர்ந்து வருந்துவது வியப்புத் தருவதாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

பஃறுளை - பல துளை. பாணி - தண்ணீர்.
எஃகு - நுண்மை. சடம் - உடல். படர் - துன்பம். இறும்பூது - வியப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jun-18, 6:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே