வேண்டுகோள்

வறுமையென்றும்
வசதியென்றும்
வேறுபட்ட ஏற்றத்தாழ்வுகளை மாற்ற
சீருடைகள் கொண்டுவந்த
பள்ளிகளில்!
மாணவர் பருவத்திலேயே
மனித இனத்தை வேற்றுமை படுத்தும்
சாதிகளை ஒழித்து
சீர்திருத்தம் செய்ய
இன்னும் முயற்சிகள் எடுக்கவில்லையோ!?

கட்டாயம் கலைக்கூடம்
அழைக்கும் பள்ளிகளில்
சாதிகளை குறிப்பிடுவது
கடமையாக மாறிவிட்டது...

வண்ண சான்றிதழ்களில்
சாதிகள் உள்ளவரை
சத்தியம் இந்த சமூகம்
முன்னேன்றம் அடைய வழிகள் இல்லை...

என் மனித இனச் சொந்தங்களுக்கு
வேண்டுகோள் ஒன்று வைக்கிறேன்!
சாதனையென்று ஏதேனும்
நாம் செய்ய நினைத்தால் -- "சாதிகளை"
அடையாளமாக வைப்பதை
அழித்துக்காட்டி விட்டு
சமத்துவமும்
சகோதரதுவமும் வளர்ச்சியடைய
நாம் வழி செய்வோம்....!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (10-Jun-18, 6:40 pm)
Tanglish : ventukol
பார்வை : 386

மேலே