கவர்ச்சி

பொழுது போக்காக
வந்து செல்லும் திரையரங்குகளிலும்
தினசரி திரைக்கொண்ட
ஆடையினால் -- அங்கங்களை
முழுவதுமாக மறைத்தால்!
வந்த இடத்தில்
வெறுப்பு தோன்றும் முரண்பட்ட
கலாச்சார முன்னேற்றம்!!

கவலையும்
களைப்பும் இளைபாற்ற வேண்டிய
இடங்களில் -- கண்களுக்கு
போதை ஊட்டும் "கவர்ச்சிகளை காட்டுவது
வழக்கமாகிவிட்டது!!

கவர்ச்சிகள் இல்லையென்றால்
காட்சிகளில் இனிப்புகள் இருக்காதென்று
இவ்வுலகில் மனகணக்கு போட
மனிதனால் மட்டுமே முடியும்...!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (10-Jun-18, 7:09 pm)
Tanglish : kavarchi
பார்வை : 450

மேலே