372 நல்லொழுக்கமே நற்புகழ் பெறும் வழி – தற்புகழ் 5

கலி விருத்தம்

தற்புகழ் வோன்றனைப் பழிக்கும் தாரணி
சொற்புகழ் விரும்பிடான் தனைத்து தித்திடும்
நற்புகழ் பெறுவழி நன்ன டக்கையோடு
அற்பமுந் தற்புக ழாமை யாகுமே. 5

– தற்புகழ்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”தன்னைத்தானே புகழ்பவனை பழிக்கும் உலகத்தோர், தன் புகழைப் பிறர் கூறக் கேட்கவும் விரும்பாதவனைப் போற்றுவர்.

அற்பமான குணத்தோடு தன்னைத் தானே புகழாதிருப்பதும், நல்ல நடத்தையும்தான் நல்ல புகழைப் பெறும் வழியாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jun-18, 9:01 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 101

மேலே