கலைந்து போன மேகம்

கலைந்து போன மேகம்
பொழியாமல் சென்றது !
கண்ணிமை அசைத்தாள்
கார்முகில் திரும்பி வந்து
பொழிந்து சென்றது !
கலைந்தாடும் கூந்தல்
தோளில் புரள
கண்ணிமைத்து காரமுகிலுக்குக்
கட்டளையிடும் கலை எழிலே
நன்றி உனக்குச் சொல்லவோ
அன்றி முகிலுக்குச் சொல்லவோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jun-18, 5:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kalaindu pona megam
பார்வை : 88

மேலே