கைபேசியோடு நீ காதல் பேசி
உன்னையே நோக்கிய
என்பார்வையை சீண்டாத நீ
கேமராவின் கண்பார்வை
சிமிட்டல்களில் சிக்கி போனாயே
பெண்ணே செல்பிகளில் .
என் முகம் பார்த்து
நீ புன்னகிப்பாயா என ஏங்கியபோதெல்லாம் ,
உன் செல்போனிலேயே முகம் பதித்து
சிரித்து போகிறாயே,.
உன் சிணுங்கல்களும் , சிரிப்பொலியும்
கேட்க காத்து கிடந்தவனுக்கு ,.
ஏக்கம் மட்டுமே மிச்சமானது ....
உன் கன்னம் தழுவி , காதோரம்
கட்டிஅணைந்து அளவளாவிய
உன் கைபேசி கண்டு .