வண்ண மலர்களும் வெள்ளை ரோஜாவும்

வண்ண மலர்களுக்கு நடுவே ஒரு
வெள்ளை ரோஜா. - இது
வாடாமல் வதங்காமல்
பூத்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்த
வெள்ளை ரோஜாவுக்கு
வண்ணம் பூசிப் பார்த்தார்கள்.
வண்ணம் ஒட்டாததால்
வெள்ளை ரோஜா ஆனது.

ஆம். - இந்த
வெள்ளை ரோஜா - பருவ
வயது வந்ததும் - இல்லற
வாழ்க்கை எனும்
வண்ணம் பூசினார்கள்.- இந்த
வெள்ளை ரோஜாவை தொட்ட
வண்ணத்தின் சாயம்
வெளுத்ததால் - இது
வெள்ளை ரோஜாவானது.

வண்ணம் தொட்டவரை
வண்ண ரோஜாவாய் இருந்தவரை - ஒரு சின்ன
வண்ண ரோஜாவை பூக்க வைத்தது. - ஆனால்
வெள்ளை நிறம் இந்த ரோஜாவின் மீது
கொள்ளைக் கொண்டதால் - தன்
வெள்ளை நிறத்தை இந்தப்
பூவின் மீது படரவைத்தது. - இந்த ரோஜாவைத்
தொட்ட வண்ணம் மாண்டு போனதால்
இந்த ரோஜா வெள்ளை ரோஜாவானது.

தான் வெள்ளை ஆனாலும்
தன் சின்ன வண்ண ரோஜாவுக்காக
வாடாமல் வதங்காமல்
பூத்துக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த சின்ன வண்ண ரோஜாவைப்
பார்த்தே தன் வெள்ளை நிறத்தை
வண்ணமயமாக்கிக் கொண்டது. - ஆம்
புது வசந்த காலத்தில் தன்
பொலிவை புதுப்பித்துக் கொண்டது.

எழுதியவர் : சங்கு சுப்ரமணியன். (12-Jun-18, 7:45 pm)
பார்வை : 59

மேலே