கண்டராதித்தன் கவிதைகள்----------திருச்சாழல் 1

திருச்சாழல்

செளந்தர்யமும், காதலும், மானுடத்தின் மீதான அன்பும், துரதிர்ஷ்டத்தை நோக்கி, துயரத்தை நோக்கி, பைத்தியத்தை நோக்கிச் செல்லும் சரிந்த பாதை கண்டராதித்தனுடையது.

அவரது உலகில் எல்லாமே பிரிக்கவியலாத ஞாபகத்தின் பிரக்ஞையில் பிணைந்து கிடக்கிறது. அந்தவுலகிலேயே உழலும் கண்டராதித்தனின் கவிதைத் தன்னிலை பல உருமாற்றங்களை அனுபவிக்கிறது. அங்கே சந்தோஷமும் துக்கமும் பயங்கரமும் வசீகரமும் நல்லூழும் துரதிர்ஷ்டமும் வேறு வேறு உயிர்நிலைகள் அல்ல.

-ஷங்கர்ராமசுப்ரமணியன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கண்டராதித்தன் கவிதைகள்
திருச்சாழல்
------------------
தவிர நீ யாரிடமும் சொல்லாதே
!பணியிடத்தில் உள்ளவன்தான்
என் வெளிர்நீல முன்றாமையால் நெற்றியைத்
துடைப்பதுபோல் அவனைக் காண்பேன்
அதுவல்ல என்துயரம் நாளை ஞாயிறென்றால்
இன்றேயென் முன்றானை நூறுமுறை
நெற்றிக்குப் போவதுதான் என்னேடி
தென்னவன் திரும்பியிருப்போனோ பிள்ளைகள்
வந்ததோ உண்டதோவென ஆயிரம் கவலைகள்
உள்ளதுதான்
வாரத்தில் ஞாயிறென்றால் ஒன்றே தான காண்
சாழலோ

எழுதியவர் : (14-Jun-18, 5:04 am)
பார்வை : 202

மேலே