கற்கக் கலை

கலை என்பது இயற்கையாக வரவேண்டும், கற்றுக் கொள்வதால் சிலருக்குக் கைகூடும். எல்லோருக்கும் கலையும், கலையை ரசிக்கக்கூடிய பண்பும் இருப்பதில்லை. இதுவும் ஒரு சிலருக்கே வரும். ஒரு கலையை ரசிக்க முடியும், ஆனால் அந்தக் கலை நமக்குத் தெரியும் என்று சொல்ல முடியாது. ஒரு சிலையின் அழகை யாரும் ரசிக்கலாம், ஆனால் எல்லோரும் சிற்பி ஆக முடியாது. கலைப் பொருளை விலைக்கு வாங்கலாம் ஆனால் கலையைக் கற்றுக் கொள்ளாமல் விலைகொடுத்து வாங்கமுடியாது.

கற்கக் கலை::
===========


கலையை ரசித்தால் கலைஞன் அவனும்.!
சிலையை வடிப்பவன் சிற்பி.! - விலைகொடுத்து
வாங்க முடியாதாம் வாராக் கலையையும்
பாங்காகக் கற்கப் பழகு.!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (14-Jun-18, 11:38 am)
பார்வை : 16
மேலே