நீயே என் இதயமடி 5

பகுதி 5

பிரியா வீட்டிற்குள் செல்லும் வரை அவள் வீடு இருக்கும் தெருவின் ஆரம்பத்தில் நின்று பார்த்துக்கொண்டு இருந்தவன் அவள் வீட்டிற்குள் சென்றவுடன் அங்கு இருந்து நகன்றான் கார்த்திக்....

ஏன் இவளுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போச்சு. சாயங்காலம் நல்லாதான இருந்தா நல்லாதான் பேசுனா...அப்பறம் எப்டி இப்படி. என யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு தனது பேக் (Bag) டியூசனில் இருப்பது நினைவு வர டியூசனை நோக்கி சென்றான் கார்த்திக்...

கார்த்திக் டியூசனுக்குள் நுழைய போகையிலேயே ..
டேய் எங்கடா போன என கேட்டுக்கொண்டே பாலா எதிர்வந்தான்.....

இல்ல மச்சி பிரியா வெளிய போனா...அதான் நானும் என கார்த்திக் சொல்லிக் கொண்டிருக்கையிலயே...

ம்ம் ம்ம் அதனால நீங்களும் வெளியபோயி ரெண்டுபேரும் ஒன்னா ஊர் சுத்ட்டு வரீங்களாக்கும் என (கார்த்திக் படிக்காம இப்டி ஊர் சுத்றானே...)என கோபப்பட்டு கேட்டான்....பாலா..

டேய் இல்லடா அவளுக்கு உடம்புக்கு முடியலடா...காய்ச்சல் மாதிரி இருந்துச்சு அதான் ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு வரேண்டா....என கவலையாக கார்த்திக் சொல்ல...

என்னடா சொல்ற சாயங்காலம் கூட நல்லா இருந்தானு சொன்ன இப்ப என்னா திடீர்னு முடியல...என ஏதோ ஒன்றை யோசித்து கவலையாக கேட்க...

அதான் மச்சி எனக்கும் தெரியல ...ஆனா இப்ப பரவாயில்லடா என சிறிது நேரத்திற்கு முன்பு பிரியாவும் அவனும் இருந்த நிகழ்வுகளை நினைத்து சிறிது முகமலர்ச்சியுடன் சொன்னான் கார்த்திக்.

ம்ம் நல்லா இருந்தா சந்தோஷம்டா...
ஆனா எனக்கு என்னமோ உன்னாலதான் பிரியா-க்கு உடம்புக்கு முடியாம போயிருக்கும்னு தோனுது..என தான் நினைத்ததை கேட்டான் பாலா....

டேய் என்னடா சொல்ற...நான் என்னாடா பன்னேன் அவள என புரியாமல் பதற்றத்துடன் கார்த்திக் கேட்க...

ஆமாடா..நீதான் ...
அவகிட்ட விளையாடுறேனு வேற ஒரு பொன்ன லவ் பன்றேனு சொன்னதுக்கு அவ கலங்கிட்டா அழுகிற நிலமையில இருந்தா ஆளே ஒரு மாதிரி ஆயிட்டானு நீதானடா சொன்ன என பாலா கேட்க..

அய்யோ ஆமடா...மச்சி அப்ப அதனாலதான் அவளுக்கு முடியலைனு சொல்றியா என கலக்கத்துடன் கார்த்திக் கேட்க...

இன்னும் தன் நண்பனுக்கு புரியவில்லையே என எண்ணிக்கொண்டு..
ஆமாடா...எனக்கு என்னமோ அப்படிதான் தோனுது என தன் நண்பன் வேதனை கொள்வான் என கூட தோன்றாமல் பட்டென சொன்னான் பாலா...

பாலா அப்படி சொன்னவுடன் கலங்கி போன கார்த்திக் டேய் நான் விளையாட்டுக்குத்தான்டா.. அப்டி அவகிட்ட சொன்னேன்
டேய் மச்சி நான் அவள உயிருக்கு உயிரா லவ் பன்றேன்டா.... அவளுக்கும் இது தெரியும்டா . அதான் சும்மா இப்டி பண்ணேண்டா நான் விளையாட்டுக்குத்தான் சொல்றேனு அவ கண்டுபிடிச்சுருவானு நினச்சேன்டா...
ஆனா அவ சீரியஸ எடுத்துக்கிட்டு இப்டி ஆகும்னு நினைக்கலடா....அவ காய்ச்சல்னு சொன்னப்ப எனக்கு எப்டி வலிச்சது தெரியுமாடா...என கலங்கிய விழிகளுடன் கார்த்திக் அழுகையை அடக்கியபடி சொல்ல..

தன் காதலிக்கு வந்த சாதாரண காய்ச்சலை எண்ணி வருத்தப்பட்டு அழுகும் தன் நண்பணை அமைதியாக பார்த்தவிட்டு டேய் இப்ப எதுக்கு அழுகுற ..
எனக்கு தெரியாதா நீ பிரியாவ எவ்வளவு லவ் பன்றேனு ..இப்ப ஒன்னும் இல்ல அவளுக்குத்தான் இப்ப பராவாயில்லைல நீ வா வீட்டுக்கு போவோம் என தன் நண்பணை தேற்றி அவன் தோள் மீது கை போட்டபடி நகர்ந்தான் பாலா...

கார்த்திக்கும் சரியென்று தன் கண்ணை துடைத்துக்கொண்டு பாலாவுடன் நகர்ந்தான்..

பிரியாவை கார்த்திக் ஏமாற்றி விட்டான் என்ற கடுப்பில் கார்த்திக்கை பார்த்து திட்டி விடுவோம் என்று எண்ணிக்கொண்டு டியூசனை வேகமாக முடித்துக்கொண்டு வந்த சந்தியா....
கார்த்திக்கும் பாலாவும் டியூசன் காம்பவுண்ட்ற்கு வெளியே நிற்பதை கண்டவள் கோபத்துடன் அவர்களை நோக்கி சென்றாள்....

அவர்கள் நின்று பேசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு அருகே சென்றவள்....
பாலாவும் கார்த்திக்கும் பிரியாவை பற்றி பேசிக்கொண்டிருக்க ...சற்று நிதானித்து அவர்கள் என்ன பேசிகிறார்கள் என தனது இரு காதை கூர்மையாக்கி கேட்களானாள்....
கார்த்திக்கும் பாலாவும்
பேசியதை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை முழுமையாக கேட்ட சந்தியாவிற்கு தனது கோபம் எல்லாம் இல்லாமல் போனது... பிரியாவை எவ்வளவு லவ் பன்றார் கார்த்திக் என முகம் மலர்ந்தால்....

இந்த வயசுல வரது எல்லாம் லவ்வே இல்ல ஈர்ப்புதானு நினச்சேன் ஆனா கார்த்திக் கண்ணு கலங்குனத பாத்தா அது எவ்வளவு உண்மையான லவ்வுனு நல்லாவே தெரியுது சாயங்காலம் பிரியாவும் அப்படி அழுதா சே... ரெண்டுபேரும் எப்படி லவ் பன்றாங்க...ம்ம் காதலுக்கு வயசில்லை என்பது உண்மைதான் போலடி சந்தியா என தன் மனதுடன் பேசியவள். முகத்தில் ஒரு சந்தோஷத்துடன் தனது வீடு நோக்கி தனது சைக்கிளில் பயணமாணாள்.................

கார்த்திக் தனது வீட்டிற்குள் நுழைந்தவுடன் தனது அம்மாவிடம் ...
எனக்கு சாப்பாடு வேண்டாம்மா.....நானும் பாலாவும் வெளிய சாப்பிட்டோம்....என சொல்லிவிட்டு தனது ரூமிற்குள் புகுந்துகொண்டாண்.

(பெரும்பாலானோர் தங்களது சுகம்,துக்கம்,கோவம் அனைத்தையும் சாப்பாட்டிலே காட்டுகிறார்கள்)

ரூமிற்குள் நுழைந்த கார்த்திக் தனது பேக்கை ஒரு
ஓரத்தில் வைத்துவிட்டு கட்டிலில் கவிழ்ந்தான்...

கட்டிலில் படுத்துக்கொண்டே தனது பர்சை எடுத்து அதில் மறைத்து வைத்திருந்த தனது காதல் தேவதை பிரியாவின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்து பார்த்தான்....
அதில் பிரியா தனது ஸ்கூல் யூனிபார்மில் இரட்டை ஜடையிட்டு விழிகளை விரித்து அழகாய் சிரித்தால்.

டெய்லியும் இப்படித்தான் போட்டால அவள பாத்துக்கிட்டே இருப்பான்...ஆனா இன்னைக்கி அவளை பார்த்துக்கொண்டே மௌணமாக கலங்கினான்...கார்த்திக்

அப்போது அவனது அறை கதவு தட்டப்படுவதன் அடையாளமாய் சத்தம் கேட்க பிரியாவின் போட்டோவை பர்சில் வைத்துவிட்டு அவசரமாய் தனது கண்களை துடைத்துவிட்டு....
யார் என ஒருவித சலிப்புடன் கேட்டு உள்ள வாங்க என்றான்...கார்த்திக்

டேய் நான்தாண்டா...என சொல்லிக்கொண்டே கதவை திறந்து உள்ளே வந்தால் அவன் அக்கா திவ்யா...

என்னடா....கடையில சாப்டியாம் அம்மா சொன்னாங்க....என திவ்யா கேட்க..

ஆமக்கா...பாலா சாப்டுவோம்னு சொன்னான் அதான் கடையில சாப்டோம்..

ம்ம்ம் சரிடா...ஆமா பாலா என்னா இப்ப இங்குட்டு வரது இல்ல என திவ்யா கேட்க...

இல்லக்கா எக்ஸாம் வருதுல அதான்...என கார்த்திக் சொன்னான்...

தன் தம்பி தன்னிடம் சரியாக பேசவில்லை என்பதை உணர்ந்த திவ்யா....ம்ம் சரிடா நீ எப்டி படிச்சுருக்க இன்னும் எக்ஸாம்க்கு ரெண்டு நாள்தான் இருக்கு என கேட்டாள்....

ம்ம் படிச்சுருக்கேன்கா...இன்னும் கொஞ்சம் பாக்கனும்..என தன் அக்காவிடம் சொல்லிக் கொண்டிருக்கையிலயே

அவனது அம்மா தேவி கையில் பாயாச டம்ளருடன் வந்தாள்....
டேய் கார்த்திக் இந்தாடா...
உனக்கு பிடிச்ச சேமியா பாயாசம்....என்று சொல்லிக் கொண்டே கார்த்திக்கிடம் நீட்டினார் அவனது அம்மா தேவி.....

அம்மா நான்தான் வெளிய சாப்டேண் எனக்கு எதுவும் வேணாம்னு சொன்னேன்ல
இப்ப எதுக்கு இத கொண்டு வந்தீங்க என தன்னை தனிமையில் விடாத கோபத்தில் கத்தினான் கார்த்திக்......

அவனது இந்த திடீர் கோபத்தை கண்டு தாயும் மகளும் திகைத்தனர்.

டேய் இப்ப ஏண்டா இப்டி கத்துற உனக்கு என்னாடா ஆச்சு என அவனது அம்மா அவன் ஏற்படுத்திய திகைப்பு மாறாமலே அவனிடம் கேட்க...

தாம் ஒருநாளும் இப்படி நடந்தது இல்லையே..ஏன் இன்று இப்படி தன் அம்மாவையே கத்திவிட்டோம் என குறுகி தன் தலை கவிழ்ந்தே இருந்தான் கார்த்திக்...

அவனை பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவிற்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை ...தன் அம்மாவிடம் உள்ள கிளாஸை வாங்கிக் கொண்டு நீங்க போங்கம்மா அவன்ட நான் கொடுத்துக்கிறேன்...என தன் தாயிடம் சொல்லி வெளியே அனுப்பினாள்....

ம்ம் என்னமோ போங்க என சொல்லிக்கொண்டே அவர்களின் அம்மா தேவி அந்த அறையை விட்டு வெளியே போனாள்...

டேய் கார்த்திக் என்னடா இது புதுசா இப்டிலாம் பன்ற ...
உனக்கு என்னாச்சுனு எனக்கு தெரியல ..இந்தா இத குடி...உனக்கு பிடிக்கும்னு அக்கா செஞ்சது...கண்டிப்பா நீ இத டேஸ்ட் பண்ணி பாக்கனும்...என சொல்லி அந்த கிளாஸை அவன் கையில் கொடுத்துவிட்டு .. குடிச்சுட்டு தூங்குடா...என அன்பால் அவனது தலையை கோதிவிட்டு அங்கு இருந்து சென்றாள் திவ்யா....

தான் கோவப்பட்டு பேசியும் தன்னை ஏதும் சொல்லாத தன் அக்காவையும் நினைத்து மேலும் கலங்கினான்...பின்பு அந்த பாயாசத்தை பாதி குடித்துவிட்டு மீதியை வைத்துவிட்டான்...

பின்பு மீண்டும் பிரியாவின் புகைபடத்தை எடுத்து பார்த்துக் கொண்டே இன்று அவளை அனைத்து முத்தமிட்டதை நினைத்தான்..

அதை நினைத்த மாத்திரத்தில் புதிதாய் ஏதோ ஒரு உணர்வு ஏற்பட அதை அனுபவித்துக்கொண்டே.. கண் அர்ந்தான் கார்த்திக்...


-தொடரும்

நண்பர்களே கதையை படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளை பதிவிடுங்கள்...

எழுதியவர் : அருண் குமார் (14-Jun-18, 4:39 pm)
சேர்த்தது : அருண் குமார்
பார்வை : 246
மேலே