அவள் பார்வை ஓர் அஸ்திரம்

வில்லாம் புருவத்தில் நாணேற்றி
உந்தன் விழிகளின் பார்வையை
ஓர் அஸ்திரமாய் என் மீது எய்தி
ஒரு நொடியில் என் 'ஆண்' என்கின்ற
கர்வத்தை வீழ்த்திவிட்டாய் உன்
பார்வையின் கைதியாய் இந்த
கைதிக்கு நீ தரும் தண்டனை யாதோ
காத்திருக்கிறேன் அதற்காக சிரம் தாழ்த்தி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Jun-18, 10:15 am)
பார்வை : 465

மேலே