செல் தமிழா செல்

தமிழன் என்றால் நடுங்கும் படை
தலைவன் என்றால் தயங்கும் நடை
தாய் தமிழுக்கு குடை பிடித்தான்
தவழும் குழந்தையும் தனித்து நிற்கும்
தைரியம் கொடுத்தான் அவன்
அவன் பெயர் சொல்லித்தான்
தமிழன் முகவரி தெரிந்தது உலகம்
அவன் காட்டிய வழியில் நடந்தவன் தமிழன்
யார் கண் பட்டு கலைந்த தமிழன் கனவு
இன்னும் தைரியம் ஆழமாய்
உள்ளத்தில் ஊன்றிடவா உணர்ந்திடவா
ஊன்றுவோம் உழைப்போம் வளர்ப்போம்
தமிழை தாயாக தைரியமாக
அன்பாக பண்பாக உயிராக
சொல் தமிழை சொல் செல் தமிழா செல்
பதுங்கித்தான் பாயும் புலியாக
தன்மானம் காத்து தரணியில் தமிழனாய்



,

எழுதியவர் : பாத்திமாமலர் (15-Jun-18, 12:06 pm)
Tanglish : sel thamila sel
பார்வை : 534

மேலே