என்னவளே

சொல்லாமல்
என்னில்
ஊடுருவி
தினம் சுற்றி வரும்
மதியாகி

தீராத உயிர் கவிதை
கருவாகி
சோர்வினில்
என் துயர் நீக்கும்
இசையாகி

பூவுக்குள் விழுந்த
பனித்துளியாய்
என் இதயத்தில்
சரிந்தவளே

இதமாக
ஏற்றுக்கொண்டேன்
உனையே
இறைவன் தந்த
வரமாய்..
​​​ ​-​ மணி
#என்னவளே

எழுதியவர் : மணி (15-Jun-18, 12:09 pm)
Tanglish : ennavale
பார்வை : 58

மேலே