வெண்பா எழுத வருமா வராதா

இணையத்தில் ஒரு குழுமத்தில் மிகப்பிரபலாமான தமிழறிஞர், நல்லாசான் திரு Dr.KK என்பவரிடம் வெண்பா கற்று வருகிறேன். ஒன்றிரண்டு வெண்பா எழுதி படிப்படியாக முன்னேறும் போது, நிறைய விதிகளைப் பின்பற்ற வேண்டுமென்பதால், இடையில் வருமோ வராதோ என்ற சந்தேகம் வந்தது. எழுதிய வெண்பா வெற்றி என்றார் என் ஆசான். மகிழ்ச்சியோடு முன்னேற, அதை வைத்தே ஒரு வெண்பா.

வெண்பா எழுத வருமா வராதா..!
=============================

வருமா வராதா வருத்தம் எனக்கு
வருமென்றீர்! உந்தனுக்கு வெற்றி..! - தருகின்ற
நல்ல இயற்பா நமைவாழ வைக்குமாம்
வெல்லும் எழுத்தை விரும்பு..!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (15-Jun-18, 1:07 pm)
பார்வை : 69

மேலே