~தமிழர் என்ற சொல்லை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஈழத்தவர்களே

இலக்கியவாதிகள் வாழ்ந்த காலத்தை வெளிக்காட்டுவதே இலக்கியம்

தமிழகத்தின் புகழ்பூத்த இலக்கியவாதி பேராசிரியர் சிலம்பொலி. செல்லப்பன்

இலங்கையில் உள்ள செய்தித்தாள்கள் தமிழக அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடு வதைவிட உள்ளூர் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட வேண்டியது அவசியம் என தமிழகத்தின் புகழ்பூத்த இலக்கியவாதி பேராசிரியர் சிலம்பொலி.சு.செல்லப்பன் தெரிவித்தார்.

சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, நெஞ்சை அள்ளூம் சீறா, பாரதிதாசன் உலகக் கவிஞர், வளரும் தமிழ் சங்க இலக்கியத்தேன் ஆகிய புகழ்பெற்ற நூல்களை எழுதிய சிலம்பொலி செல்லப்பன் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருந்த சிலம்பொலி சொலப்பனை சந்தித்து இலக்கியத் துறை தொடர்பாக கலந்துரையாடியிருந்தோம்.

தமிழ் மொழியின் முக்கியத்துவம் தொடர்பில் குறிப்பிட்ட அவர், புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் வீடுகளில் முழுமையாக தமிழ் மொழியில் கலந்துரையாடுவதன் மூலமே இளம் சமுதாயத்தினரின் தமிழ் ஆர்வத்தை வளர்க்க முடியும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார். தினகரனுடன் அவர் பகிர்ந்துகொண்ட விடயங்கள் வருமாறு,

கேள்வி: இலங்கைக்கு எத்தனை தடவை நீங்கள் வந்துள்Zர்கள்? ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏதேனும் வித்தியாசங்களை உணரக்கூடியதாகவுள்ளதா?

பதில்: ஐந்து முறை நான் இலங்கை வந்துள்ளேன். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இம்முறையே முதல் தடவையாக வந்துள்ளேன்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று வந்தாலே உண்மையான வித்தியாசத்தை அறிந்துகொள்ள முடியும். இருந்தபோதும் தலைநகரான கொழும்பில் மக்களைப் பார்க்கும்போது சகலரும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதைக் காணமுடிகிறது.

இருந்தபோது யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளுக்குச் சென்றாலே உண்மை நிலைமையை அறிய முடியும்.

கேள்வி: இலங்கைக்கும் உங்களுக்கும் காணப்படும் இலக்கிய ரீதியிலான தொடர்புகள் பற்றிக் கூறுங்களேன்?

பதில்: நான் ஏற்கனவே குறிப்பிட் டதைப் போன்று ஐந்து தடவைகள் இலங்கை வந்துள்ளேன். ஒரு முறை இலங்கை அரசாங்கத்தாலேயே அழைக் கப்பட்டு சுமார் 12 நாட்கள் தங்கியிருந்தேன். இந்து கலாசார அமைச்சராகவிருந்த பி.பி.தேவராஜ் என்னை அழைத்துவந் திருந்தார்.

நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்களில் பங்கெடுத்திருந்தேன். அதன் பின்னர் கம்பன் விழாக்களில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருந்தேன். இம்முறை திருக்குறள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளேன்.

கேள்வி: இலங்கையில் இலக்கிய ஆர்வம் அல்லது இலக்கியத்துக்கான பங்களிப்பை எவ்வாறு பார்க்கின்aர்கள்?

பதில்: நிச்சயமாக இலங்கையின் இலக்கியம் முன்னேறியதாக உள்ளது. தமிழ் நாட்டுடன் ஒப்பிடுகையில் இலங்கை அறிஞர்கள் தமிழ் இலக்கி யத்துக்காக நிறைவே தொண்டு செய்துள்ளனர். தமிழில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும், தமிழ் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

கேள்வி: தமிழ் இலக்கியம் எனும் பாது சங்க இலக்கியம் பற்றியே கூடுதலாகக் கதைக்கின்றோம். இந்த நிலைமை தொடர வேண்டுமா அல்லது காலத்துக்கேற்றவாறு இலக்கியத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமா?

பதில்: இலக்கியம் என்பது வளர்ந்து வருவது மாத்திரமன்றி அந்தந்த காலத்தில் அவர் அவர் வாழ்ந்த காலத்தை வெளிக்காட்டுவதாகவே இலக்கியங்கள் அமைந்துள்ளன. அது மாத்திரமன்றி வாழ்க்கை நிலையை பொது நிலையாகச் சொல்வதே இலக்கியங்களாகும். வாழ்க்கை முறையை எடுத்துச் சொல்வதே இலக்கியமாக அமைவதுடன், அவற்றை தகுந்த முறையில் வெளிப்படுத்துவது அவற்றின் நோக்கமாக இருக்கும்.

கேள்வி: இளம் சமுதாயத்தினர் மத்தியில் காணப்படும் இலக்கிய ஆர்வம் பற்றி நீங்கள் என்ன கருதுகிaர்கள்?

பதில்: இங்குள்ள நிலைமையை என்னால் முழுமையாகச் சொல்ல முடியவில்லை. தமிழகத்தைப் பொறுத்த வரையில் கணனிதுறை வந்த பின்னர் நல்லமுறையில் பொருட்டுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தமையால் இளைஞர்கள் இலக்கியங்களில் போதியளவு கவனம் செலுத்தவில்லையென்பதே எனது நிலைப்பாடாகும்.

மரபு நிலைமையான இலக்கியங்களில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. கணினியில் காணப் படும் பொழுதுபோக்குகள் மற்றும் சிறந்த ஊதியத்தைத் தேடிக்கொள்வது போன்ற காரணங்களால் அவர்கள் இலக்கியத் துறையில் நேரம் செலவிடுவதைக் குறைத்துள்ளனர்.

இந்த நிலைமையை மாற்றுவன் மூலமே இலக்கியத்தைப் புதிய நோக்கோடு வழங்கக் கூடியவாறான இலக்கியங்கள் தோன்றவேண்டும்.

கேள்வி: திருக்குறள் இலக்கிய மேடைகளில் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. இதன் உண்மை நிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கின்aர்கள்?

பதில்: பொதுவாகவே திருக்குறள் எல்லா நிலைகளிலும் பேசப்படுகின்றது. திருக்குறளுக்கு என தனியான மாநாடொன்று நடத்தப்படும்போதே அங்கு முற்றிலும் திருக்குறள் பயன்படுத் தப்படும்.

ஏனைய இடங்களில் அவ்வப்போது திருக்குறள் பயன்படுத் தப்பட்டே வருகின்றது. அதன் கருத்துக்கள் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அது மாத்திரமன்றி திருக்குறளின் கருத்தை ஊடறாத இலக்கியம் எதுவும் இல்லையென்றே கூற வேண்டும்.

கேள்வி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பணிகள் பற்றி கூறுங் களேன்?

பதில்: தனிநாயகம் அடிகளார் தான் இந்த மாநாட்டுக்கு அடிப்படையாக அமைந்தவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கம் உலகின் பல பகுதிகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் தமிழ் நாட்டுக்கு வந்து ஆய்வு செய்வதற்கும், தமிழகத்தில் உள்ள அறிஞர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று ஆய்வு செய்வதற்கும் வசதிகளை ஏற்படுத்துக்கொடுப்ப தேயாகும்.

கொண்டுகொடுக்க ஏற்ற நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக இது ஒருவாக்கப்பட்டபோதும் அரசியல் நிலைமைகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் காரணமாக இதனை உருவாக்கிய நோக்கம் முழுமையாக நிறைவேறிவிட்டது எனக் கூற முடியாது. ஒரு சிலரை அழைத்துப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறதே தவிர முழுமை யான பயனைப் பெறக் கூடியதாகவில்லை.

ஏற்கனவே இருக்கும் கல்லூரிகளைப் போலவும், பல்கலைக்கழகங்களைப் போல வுமே இது தற்பொழுது செயற்படுகிறது. இங்குள்ள புத்தக நிலையம் பலராலும் பயன்படுத்தப்படுகின்றது.

கேள்வி: புலம்பெயர் நாடுகளில் தமிழ் ஆர்வம் பற்றி உங்கள் கருத்து.

பதில்: என்னைப் பொறுத்த வரையில் புலம்பெயர்ந்து வாழ் நாடுகளிலேயே தமிழ் ஆர்வம் அதிகமாக உள்ளது என நினைக் கின்றேன். தமிழோடு ஊடாடி வாழ்ந்து வருபவர்களைவிட வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந் துவாழ் தமிழர்கள் தனித்தமிழில் பேசவேண்டும் என நினைக்கின்றனர்.

குறிப்பாக ஈழத்தமிழர்கள் தான் ‘தமிழர்’ என்ற சொல்லை உலகத்துக்கு அறிமுகப் படுத்தி யவர்கள். தமிழ் பேசும் மக்கள் பலர் வெளிநாடுகளில் இருந்தபோதும் தமிழர் என்ற சொலை உலகுக்கு நிலைநாட்டியவர்கள்.

கேள்வி: புலம்பெயர்ந்துவாழ் தமிழர்கள் மத்தியிலான இலக்கிய ஆர்வம் மற்றும் அங்குள்ள இளம் சந்ததியினருக்கு தமிழ் பேசுவதில் காணப்படும் ஆர்வத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்aர்கள்?

பதில்: புலம்பெயர்ந்த தமிழர்களில் கூட இங்கிருந்து சென்ற வயது வந்தவர்களே தமிழைப் பேசவேண்டும், அதனை வளர்க்க வேண்டும் என ஆர்வம் காட்டுகின்றனர்.

எனினும் அங்குள்ள இளம் சமுதாயத்தினர் இதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. அவர்கள் பழகும் சூழல் வேறு. வீட்டைவிட்டுச் செல்லும் போது பிறமொழியினருடன் பழகவேண்டி ஏற்படுவதால் இந்த நிலைமை மாறுகிறது.

கேள்வி: கட்டபொம்மனையும் சிலப்பதி காரத்தையும் சாமானியனுக்கு அறிமுகம் செய்த ம.பொ.சி (சிவஞான கிராமணியார்) யுடனான உங்கள் தொடர்புபற்று சொல்வீர்களா?

வீடுகளில் பெற்றோர்கள் முழுக்க முழுக்க தமிழில் உரையாடுவதும், அவர்களை தமிழில் கற்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்வதுமே இந்த நிலைமையை மாற்றுவதற்கான வழியாக இருக்கும்.

கேள்வி: கட்டபொம்மனையும் சிலப்பதி காரத்தையும் சாமானியனுக்கு அறிமுகம் செய்த ம.பொ.சி (சிவஞான கிராமணியார்) யுடனான உங்கள் தொடர்புபற்று சொல்வீர்களா?

பதில்: ம.பொ.சிக்கும் எனக்கும் நல்லதொடர்பு இருந்தது. கிட்டத்தட்ட அவர் என்னை ஒரு தம்பிபோல நடத்தினார். நெருங்கிய தோழமை கொண்டவராக இருந்தார்.

கேள்வி: தமிழகத்தில் நீங்கள் நடத்தி வரும் சிலப்பதிகார மாநாடு தொடர்பில் சற்றுக் கூறுங்களேன்?

பதில்: சிலப்பதிகாரம் மற்ற இலக்கி யங்கள் போல அதிகமாகப் படிக்கப்படுவ தில்லை. திருக்குறள், கம்பராமாயணம் போல இதனைப் படிப்பதில்லை.

மூன்று வேந்தர்களையும் ஒன்று படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதே சிலப்பதிகாரம் எனும் இலக்கியம். கம்பராமாயணத்தில் துணைமாந்தர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். எனவே ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒவ்வொரு விடயத் தைச் சொல்ல முடியும்.

எனினும் சிலப்பதிகாரத்தில் அவ்வாறில்லை. குறிப்பிட்டளவு கதைமாந்தர்களே இருக்கின்றனர். இதனால் பல விடயங் களை ஒன்றாக சொல்ல முடியவில்லை. இதன் காரணமாகவே பலர் சிலப் பதிகாரத்தைப் படிப்பதில்லை.

.இந்த நிலைமையை மாற்றுவதற்காக ‘சிலப்பதிகார அறக்கட்டளை’ ஒன்றை நான் தொடங்கியுள்ளேன். எழிய முறையில் சிலப்பதிகாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே இதன் முக்கியமான நோக்கமாகும். என்னுடைய பிறந்தநாள் சிலப்பதிகார நாள் எனக் கொண்டாப்பட வேண்டும் என்பதே விருப்பமாகும்.

கேள்வி: தமிழ் இலக்கிய நூல்களை எடுத்துக்கொண்டால் பெண்களை முதன்மையாகக் கொண்ட நூல்களே காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் கோவலனைவிட கண்ணகிக்கும், மாத விக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இது தொடர்பான விடயங்களைப் பகிர்ந்துகொள்வீர்களா?

பதில்: சிலப்பதிகாரம் கதைப்போக்காகச் சொல்லப்படுகிறதே தவிர. தமிழ் நாடு ஒன்றாக வாழவேண்டு என்பதையே குறித்து நிற்கிறது. சமயச் சார்பின்றி மக்கள் வாழவேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டியது. இதில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்வதற்கில்லை.

இங்கு கோவளனின் பங்கு வேறு, கண்ணகி மற்றும் மாதவியின் பங்கு வேறு. ஆண்களைப் பொறுத்தவரையில் நிலை யான ஏற்றத்தாழ்வு தொடர்பான பண்புகளைக் கொண்டதாக இலக்கி யங்களில் சித்தரிக்கப்படுகின்றது.

ஆனால் இலக்கியங்களில் பெண்களை சித்தரிக்கும்போது ஒன்றில் உயர்ந்த நிலையில் எழுதுவார்கள் அல்லது தாழ்ந்த நிலையில் எழுதுவார்கள். காரணம் பெண்கள் தான் வாழ்க்கையின் துணைகள். வாழ்க்கைத் துணை நன்றாக அமைகின்றபோது பெண்களை பாராட்டிப் பேசுவார்கள்.

அதேநேரம், துணை சிறப்பாக அமை யாத பட்சத்தில் சற்று தாழ்த்தி எழுது வார்கள். சிலப்பதி காரத்திலும் அவ்வாறு கண்ணகியும், மாதவியும் சித்தரிக்கப் பட்டுள்ளனர்.

கேள்வி: சில தினங்களுக்கு முன்னர் தந்தை பெரியாரின் 134ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அவருடைய சிந்தனைகள் இன்னமும் தமிழகத்துக்குத் தேவையானதாக உள்ளதா?

பதில்: அவருடைய கருத்துக்கள் மற்றும் போதனைகள் தமிழகத்துக்கு இன்றும் நிச்சயமாகத் தேவையானது. இன்னும் சொல்வதாயின் தற்பொழுதே அவருடைய போதனைகள் அதிகமாகத் தேவையாகவுள்ளன. அவருடைய சிந்தனைகள் தமிழன் தமிழனாக வாழவேண்டும், பிற மக்களால் ஏமாற்றப்படக்கூடாது, நீதியும், நேர்மையும் வழுவாது மக்கள் நடக்க வேண்டும்.

பக்தி என்ற பெயரால் மக்கள் ஏமாற்றுப்படக் கூடாது என்பதே அவருடைய முக்கிய போதனைகளாக இருக்கின்றன. இவை தமிழகத்துக்கு இன்றும் நிச்சியமாக ஏற்புடையதாக இருப்பதுடன் மேலும் தேவையான தாகவும் உள்ளன.

கேள்வி: சாமான்ய மக்களுக்கு ஏன் இலக்கியம் அவசியம்?

பதில்: ஒருவர் 24 மணி நேரமும் வேலையும் பழுவுமாக இருக்க முடியாது. மனதை இலகு படுத்துவதற்கும், பழுவிலிருந்து ஓய்வு பெறுவதற்கும் வாசிப்பு அவசியம். இலக்கியம் என்பது வாசிப்பினால் உருவாகும் விடயம். வாசிப்பு மற்றும் இலக்கியம் இல்லாத மனிதன் முழுமையான மனிதன் என்று சொல்ல முடியாது.

கவலை இருக்கின்றபோது புத்தகம் ஒன்றை வாசித்தால் கவலை மாறுவதுடன், வாழ்க்கையும் மாறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.


கேள்வி: இலக்கியக் கூட்டங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சிலர் மாத்திரமே பங்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இந்த நிலைப் பாட்டை எவ்வாறு மாற்றமுடியும்.

பதில்: இலக்கியத்தை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் முக்கிய பங்களிப்பு ஊடகங்களுக்கு உள்ளது. வெறுமனே சினிமாத்துறையை மாத்திரம் பிரபல்யப்படுத்துவதே ஊடகங்களின் செயற்பாடாக உள்ளது.

சினிமாவுக்குக் கொடு க்கும் முக்கியத் துவம் இலக்கியக் கூட்டங்களுக்கோ அல்லது இலக்கியத் துக்கான பங்களிப்போ இல்லை. செய்தித் தாள்களை எடுத்துக் கொண்டாலும் சினிமா வுக்கே அதிக இடம ளிக்கப்படுகிறது.

குறிப்பாக பொங்கல், புத்தாண்டு போன்ற பொதுவான விழாக்களின் போது கூட ஊடகங்களில் சினிமாத்துறையினருக்கு மாத்திரமே இடமளிக்கப்படுகிறது. இந்த நிலைமையை மாற்றுவதன் ஊடாக இலக்கியத் துறைமீதான மக்களின் ஆர்வத்தை அதிகரிக்க முடியும்.

கேள்வி: இலங்கையிலுள்ள தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

பதில்: பெரும்பாலும் இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் உள்நாட்டு செய்தி களைவிட இந்தியாவின் தமிழக அரசியலுக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதைக் காணக்கூடியதாக இருக் கின்றது.

நான் என்ன நினைக்கின்றேன் என்றால் இங்குள்ளவர்கள் தமிழ்நாட்டு அரசிய லைத் தெரிந்திருக்க வேண்டும்.

இருந்தாலும் எந்தளவுக்குத் தெரிந்திருக் கணுமோ அந்த அளவுக்கு அதனைத் தெரிந்து வைத்துக்கொண்டு உள்நாட்டு செய்திகளை அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதேநேரம் இலங்கை ஊடகங்கள் மரபுக் கவிதையைவிட புதிய கவிதைக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

நேர்காணல் மகேஸ்வரன் பிரசாத்
2015

எழுதியவர் : (15-Jun-18, 6:42 pm)
பார்வை : 112

மேலே