பிரிவென்ற தீ

கண்களால் என்னை
சொக்கி இழுத்த
என்னவன் -- என்னைவிட்டு
விலகிய நாட்களில் எல்லாம்
உறக்கம் என்பதை இமைகள் மறந்து!
துயிலிடும் நெஞ்சிலெல்லாம்
கண்ணீர் துளியாக நிரம்பியுள்ளது....


அன்பு கொண்டு
அவனிட்ட முத்தத்தின் சூடு
தணியும் முன்னே -- தனிமையின்
வெப்பத்தில் வெந்து தவிக்கின்றது
பிரிவென்ற தீ...!!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (16-Jun-18, 7:00 pm)
Tanglish : piriventra thee
பார்வை : 705
மேலே