ஆட்டம்

ஆடும் பொம்மை ஆட்டமென
ஆடியே அகில வாழ்வினிலே
நாடும் நன்மைகள் நமக்கெனவே
நாளும் தலையை ஆட்டிடுவர்,
கேடு சூழ்ந்து வருவதையே
கருத்தில் யாரும் கொள்வதில்லை,
தேடு வாழ்வில் நல்லதையே
தெரிந்து நடந்தால் இடரிலையே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Jun-18, 7:47 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : aattam
பார்வை : 50

மேலே