விண்மீனும் பெண் மீனும்

இரவில் மட்டும் மின்னும் விண்மீன்.
உறவைத் தட்டும் இந்தப் பெண்மீன்.
சந்திரனைச் சார்ந்தே அது உதிக்கும்.
சந்திப்பதைச் சார்ந்தே இது குதிக்கும்.
விண்மீன் அதனால் வெளிச்சமில்லை.
பெண்மீன் இதனால் சோகமில்லை.
விண்ணைத் தொட்டே அது தோன்றும்.
கண்ணைத் தொட்டே இது தூண்டும்.
எட்டாத உயரத்தில் அது இருக்குது. - கைக்குக்
கிட்டாமல் பெண்மீன் இது நழுவுது.
விண்ணை விட்டு
மண்ணில் வீழ்ந்தால் அது மாயும். - இது
கண்ணை விட்டு நெஞ்சில் பதிந்தால்
காதல் பாயும்.
சுவாசமே இல்லாத இடத்தில் அது தோன்றுது.
ஸ்வாசமாகவே பெண்மீன் இது ஊன்றுது.
பகலில் அது மறைந்துவிடும். - பகலென்றும் இரவென்றும்
பாராமல் இது உறைந்துவிடும்

எழுதியவர் : சங்கு சுப்ரமணியன். (16-Jun-18, 7:53 pm)
பார்வை : 240

மேலே