அவனுக்கேன் உள்ளங்களிரண்டு வைத்தாய் இறைவா

இது என்ன உன் வஞ்சகம் இறைவா
என்னவனுக்கு ஏன் இப்படி
இரண்டுமனங்கள் தந்துவிட்டாய்
என்னை முதலில் ஏற்ற உள்ளத்தில்
நான் அறிவேன் இப்போது மற்றோருவளுக்கும்
அவன் இடம் தந்துவிட்டானே-பொறுக்காது
இறைவா அந்த நீதிக்கே பொறுக்காது இது
நீ இறைவன்தான் என்றால் இப்போதே
அவன் உள்ளத்திலிருந்து 'அவள்' நினைவை
எடுத்துவிட்டு அதில் அவன் எப்போதும்
அதில் என்னை மட்டுமே வைத்து காத்திட
வழி செய்துவிடு , அதுவரை உன்னை நான்
துதிக்கவும் மாட்டேன் இது ஏன் கோரிக்கை.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Jun-18, 7:58 am)
பார்வை : 299

மேலே