என் ஆசைகள்

எத்தனையோ இளவட்ட
ஜோடிகளை இப்பாதைகளில்
காண்கையிலே எனக்கும்
காதலி ஒருவள் வருவாள்
நானும் அவளோடு
கைகோர்த்து நடைபோடுவேன்
காதல் வெற்றி வீரனாய்!

அவளுக்கு நிலவு
தங்கையென சொல்லிடுவேன்
அந்நிலவையே என்னவளுக்கு
காவலாய் வைத்திடுவேன்!

பூத்திருக்கும் பூவையெல்லாம்
பூந்தளிர் அவளின்
கார்கூந்தல்தனில்
சூடிடுவேன்!அதனைக்கண்டு
கோபம் கொள்ளும்
கருமேகம்தனை அடித்து
துரத்திடுவேன்!

வில்லென வளையும்
அவள் புருவத்திற்கும்
அம்புகளை எய்யும்
அவளது விழிகளுக்கும்
கார்முகிலின் கரு மையினை
எடுத்திடுவேன்!
வண்ணமில்லா அழும்
வெண்மேகம்தனை கண்டு
இரசித்திடுவேன்!

அவளின் பாதம்தனை
கழுவிட தேவகன்னிகளை
அணுப்ப வான்
இந்திரனுக்கு ஓலை
அனுப்பிடுவேன்!

மென்பாதமவள் நடந்திட
பூக்களால் நெய்த
கம்பளம்தனை விரித்திடுவேன்
அவள் மேனியது மேலும்
அழகுற அத்தர்தனை
கொணரச் செய்திடுவேன்!

அழகானவள் இவளேயென
அகிலமெலாம்
அறிக்கைவிட்டு அனைத்து
ஆண்களையும்
அசர வைத்திடுவேன்
ஒருவனுக்கு ஒருத்திதான்
என்பதுதனை
அனைவருக்கும்
உணர்த்திடுவேன்!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (18-Jun-18, 9:05 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : en aasaikal
பார்வை : 459

மேலே