ஆதலினால் ......


ஓடியிருக்கிறேன் ..

கடமைகள் என்னைத் துரத்த,

காலத்தை நான் துரத்தி

ஓடியிருக்கிறேன் ...


போதும் என்ற

நிலை வந்த போது

நிறுத்தி விட்டேன்..

திரும்பிப் பார்க்கையில் ,

கடந்து வந்த பாதையில்

கற்களும்,கற்கண்டுகளும்...


ஓய்வின் போது,

கற்களை ஒதுக்கிவிட்டு,

கற்கண்டுகளை மட்டும்

சுவைப்பதில் ,

கவனமாய்த்தான் இருக்கிறேன் !


ஆனாலும்

அப்படி ஒன்றும் இனிக்கவில்லை

இந்த ஓய்வு!

அட !ஓட்டத்தில் உள்ள சுகம்

ஓய்வில் இருப்பதில்லை போலும் !


ஆதலினால் தோழர்களே

ஓடுங்கள் இயன்ற வரை !

இயலாத போது மெதுவாய்

நடக்கவாவது செய்யுங்கள் !






எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (13-Aug-11, 9:41 pm)
பார்வை : 336

மேலே