கவிதை எழுது!

கோபம் வந்ததா!
தயங்காது சண்டையிடு
எழுதுகோளைக் கொண்டு!
வருத்தம் வந்ததா!
கண்ணீர் விடு
வார்த்தைகொண்டு!
மகிழ்ச்சியா!
உடனே பகிர்ந்துகொடு
இனிய கவிதைகொண்டு!
பயமா!
விரட்டிவிடு
கவிதை எழுதிவிடு!
வியந்தாயா எதர்கேனும்!
விவரித்து எழுது!
பிறர் வியப்பதற்கு!
இழிவிபடுத்தியதை
கவிதையிலேனும்
அனைத்துவிடு!
அமைதியை தேடினால்
கவிதையைத் தொடு!
வீரமாய் இருந்தால்
வார்த்தையில் விளையாடு!
கருணையை காட்டு
உயிருள்ள உயிருக்கும்
தமிழிலுள்ள உயிருக்கும்!
நவ ரசத்திலும்
கவிதையோடு இரு!
தமிழுக்கு தகுந்த மரியாதை கொடு!

எழுதியவர் : க.ரகுராம் (13-Aug-11, 10:23 pm)
சேர்த்தது : ரகுராம்.க
பார்வை : 425

மேலே