ஆராய்ச்சி உலகம்

மண்ணையும் விண்ணையும் ஆராய்ந்த மனிதன்
தொழிநுட்பத் திறன் பெற்றான் பெறுகின்றான்
அவன் கண்டுபிடிப்புக்கு அளவேயில்லை

ஆராய்ச்சியிலும் கண்டுப்பிடிப்பிலும் குறியாக
குறிக்கோளாக தன்னை தன் செயலை முன்னிலைப் படுத்தும் மனிதன்
மக்களின் சவுகரியங்களையும் சுகங்களையும்ஆராய நேரம் ஒதுக்கவில்லையே
விண்ணையும் மண்ணையும் அலச அலச அதற்கு எல்லையே இல்லை
ஆண்டவன் படைப்பில் எல்லைகள் ஏது /

மனிதனுக்கு ஆசைகள் வேண்டும் ஆசைகள் நிராசையாய் மாறிவிடக் கூடாது
வாழ்வை அனுபவிக்கும் நுட்பங்கள் ஆற்றல்கள் யாவும்
ஆரோக்கியம்நிறைந்த மனிதன் உலகில் வாழ்ந்தால் மட்டுமே ,
அனுபவிக்க முடியும் ,
மனிதனின் கண்டுப்பிடிப்புக்களிலும் நன்மைகள் காண இயலும்.
நீர் இல்லாத நிலத்தில் செடி இல்லை,
விதை இல்லாத மண்ணில் பயிரில்லை
விழலுக்கு இறைக்கும் நீர் போல் இன்றி,
வாழ்வின் சுகநலன்களில் ,அக்கறை கொள்ள வேண்டும்
மனித வளத்தை மேம்படுத்த மனிதன் தன்னிறைவு பெறுவான்

சுகத்துடன் பலத்துடன் நுண்ணறிவு கொண்ட மனிதனாக
மனிதன் வாழ ஆராய்வை முன்னிறுத்து,
அவனுக்காக அவன் தேவைக்காக எல்லாம் ,
ஆனால் அவன் சுகத்துடனும் மன உறுதியுடனும் வாழவும் வேண்டுமே/
அனுபவிக்க மனிதன் வேண்டுமே/
உலகில் அத்தனை படைப்புகளும் அவனுக்காகவே
ஆராய்ந்து அறிவது மனிதனின் அறிவுக் கூர்மை
அந்தக் கூர்மையின் ஒளியில்
மனித வாழ்வு முக்கிய ஒளியாய் மிளிர வேண்டும்
எல்லாம் மனிதனுக்கே
இறைவன் படைத்த உலகில் எல்லாம் மனிதன் வாழுகின்றான்,
மனிதன் அறிந்த உலகை எல்லாம் இறைவன் ஆளுகின்றான் ,
இது மனிதன் தெரிந்து கொள்ள முடியாத அதிசயம்

எழுதியவர் : பாத்திமாமலர் (20-Jun-18, 10:57 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : aaraaychi ulakam
பார்வை : 156

மேலே