ராதே உனக்கு கோபம் ஏனடி

உறங்காப் புளிபோல்
உறங்காது காத்திருந்தேன்
பகலும் போய் இரவும் வந்தது
காத்து காத்து அயர்ந்த கண்கள்
தானாக சற்று மூடியது
தூக்கமும் என்னைத்தழுவியது
நள்ளிரவோ இப்போது-யாரோ
என் கண்களை மெல்ல அணைக்க
என் மேனியை யாரோ மெதுவாய்
தொடுவதுபோல் உணர்ந்தேன்-தூக்கத்தில்
ஏதோ கனவுலகில் நான் அவனோடு
என்று இருந்தபோது அவன் கன்னத்தில்
லேசாக கிள்ளுவதுபோல் இருக்க
கண் விழித்து பார்த்தேன் , நான்
கண்டதெல்லாம் கனவு காட்சியல்ல
நெனெவே...அவன், என்னவன்
என்னெதிரே அமர்ந்திருக்க
விரிந்த அவன் மடியில் என் தலைக்
கூந்தலை வருட கன்னத்தில் முத்தமிட
நானோ அவன் காலம் தாழ்ந்து வந்ததென
என்ற ஆபத்தில் முகம் சுளிக்க , ஆனால்
மனதில் ஓர் ஆனந்தம் தழுவ நினைத்தேன்,,
கண்ணனாய் வந்தானோ மாயமாய்
இவன் கள்ளன் என் மனமறிந்து
என்னை என்று எண்ணியபோது, அவன்
'ஏனடி ராதே உனக்கு என்மீது இந்த கோபம்
காதலியே தவறேது செய்தேன் நான்'
என்றான் என்னை மயக்கி
'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jun-18, 7:17 am)
பார்வை : 103

மேலே