என்னவள் சொன்னாள் அவள் என் பூஜாரி என்று

அவள் பார்வையால் எனை
சிறைப்பிடித்தாள் இதயத்தில்
பூட்டிவைத்தாள் திறந்து
விடுவாயா என்று கேட்டேன்
அவள் சொன்னாள் அன்பே
என் இதயம் நீ இருக்கும் கோவில்
அதில் உறையும் தெய்வம் நீயல்லவோ
தெய்வத்தை நித்தம் பூஜித்து
அந்த என் இதயத்தைப் பூட்டிவைப்பேன்
பூஜைக்குப்பின் கோவில் அறைபோல
என்றாள் அவள் எந்தன் பூஜாரி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Jun-18, 10:12 am)
பார்வை : 76

மேலே