அவள் கண்கள்
அவள் கண்களின் வெள்ளை
விழித்திரைகள் அலர்ந்த
குண்டு மல்லிகையோ -அதில்
மொய்க்கும் கருவண்டுகளோ
அந்த பேசும் கருவிழிகள் அதில்
வண்டின் இறக்கைகளோ அந்த
மூடித்திறக்கும் இமைகளிரண்டும்