!!!ஜாலியன் வாலாபாக் படுகொலை!!!

சும்மா கிடைக்கவில்லை
சுதந்திரம்
வியாபாரம் செய்ய
நாட்டிற்குள் நுழைந்த வெள்ளையன்
நம் நாட்டின் செல்வாக்கையும்
நம் மக்களின் அறியாமையையும்
கண்டு தந்திரமாய் நம்மையெல்லாம்
அடிமையாக்கி நம் நாட்டை
ஆள தொடங்கிவிட்டான்....

அவன் வாளுக்கும்
அவன் துப்பாக்கிக்கும்
நாம் எண்ணிக்கையிலடங்கா
உயிர்களை இழந்தோம்
சொந்த நாட்டில்
அடிமைகளாய் வாழ்ந்தோம்!
நம் செந்நீரில் அவன்
குளித்து மகிழ்ந்தான் - கண்ணீரில்
நாம் துடித்து அழுதோம்....

1918 ஆம் ஆண்டு
வெள்ளையர் ஆட்சியில்
ஒரு அடக்குமுறைச் சட்டம்
நடைமுறை படுத்தப்பட்டது
எந்த ஒரு தலைவர்களையும்
மக்களையும் எவ்வித
காரணமும் காட்டாமல்
கைது செய்யவும் சிறையில் அடைக்கவும்
அடக்குமுறைகளில் ஈடுபடவும்
காவல்துறைக்கு முழு அதிகாரம்
உண்டு என்பதுதான் அந்த சட்டமாம்....

இந்த சட்டத்தை
பாலகங்காதர் திலகரும்
மகாத்தா காந்தியும் - மற்றும்
நம் தலைவர்கள் அனைவரும்
வன்மையாக கண்டித்தனர்

ஆனாலும் அடங்காத வெள்ளையன்
ஜெனரல் டையர்
1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 நாள்
பொதுக்கூட்டம் எதுவும்
நடத்தகூடாது என்றும்
மக்கள் எங்கும் ஒன்று கூட
கூடாது என்றும் பஞ்சாப்
மாகாணத்தில் ராணுவச் சட்டம்
என்ற பெயரில்
ஊரடங்கு உத்தரவு பரப்பித்தான்....

நம் மக்கள் இதை எதிர்த்து
1919 ஏப்ரல் 13 அன்று
ஜாலியன்வாலாபாக்
என்ற இடத்தில்
பல்லாயிரகணக்கான மக்கள்
ஒன்றுதிரண்டு
அமைதிபோராட்டத்தில்
ஈடுபட்டிருந்தார்கள்.....

நம் மக்கள் கூடி இருந்த
அந்த ஜாலியன்வாலாபாக்
என்ற இடம் நான்குபக்கமும்
சுவர் எழுப்பப்பட்டு ஒரே ஒரு
நுழைவு வாயில்தான்
உண்டு என்பதால் அந்த
வெள்ளைக்கார எமன் ஜெனரல் டையருக்கு
வசதியாய் போய்விட்டது....

அந்த தருணத்தில்
100 வெள்ளையின படையினரையும்
50 இந்திய சிப்பாய்களையும்
அழைத்து வந்த ஜெனரல் டையர்
வாயில் கதவை அடைத்துவிட்டு
எந்தவித எச்சரிக்கையும் தராமல்
கூட்டத்தை நோக்கி சுடுமாறு
தன் படையினருக்கு உத்தரவிட்டான்....

வெறிபிடித்த வெள்ளையின வெறியர்கள்
துப்பாக்கியால் மக்களை வேட்டையாட
தொடங்கினர் - மக்கள் அங்கும் இங்கும்
சிதறி ஓடினர் குழந்தைகள் பெரியோர்கள்
என மிதிபட்டு மடிந்தனர்
சிலர் சுவரேறி குதித்து
தப்பிக்க முயன்றனர் - மேலும் பலர்
அந்த மைதானத்தின் நடுவில் இருந்த
கிணற்றில் குதித்தனர் - அதில் 120 பேர்
பரிதவித்து மடிந்தனர்....

வெள்ளை இன வெறியர்கள்
150 பேரும் தங்கள் துப்பாக்கியில் உள்ள
தோட்டாக்கள் தீரும்வரை
தொடர்ந்து வெறிபிடித்த காட்டேரிகளாய்
துப்பாக்கிச்சூடு நடத்தி கொண்டு
இருந்தனர்....

ஒரு வழியாக அவர்களின்
தோட்டாக்கள் தீரவும்
துப்பாக்கிச்சூடு நிறுத்தப்பட்டன
நம் மக்கள் 1700 பேர்
பரிதாபமாய் படுகொலை செய்யப்பட்டனர்...

இந்த கொலைவெறி தாக்குதலால்
பஞ்சாப் மாகாணம் முழுவதும்
சுடுகாடாய் காட்சியளித்தது
இந்த சம்பவம் இந்தியாவையே
உலுக்கியது....

இது குறித்து அன்றைய
வெள்ளைக்கார பஞ்சாப்
ஆளுநர் மைக்கேல் ஒட்வியர்
ஜெனரல் டையரின் நடவடிக்கைகள்
அனைத்தும் எனக்கு உடன்பட்டவையே
என்று கருத்து தெரிவித்தானாம்....

1919 ஆகஸ்ட் 25 அன்று
ஜெனரல் டையர்
ஸ்டாப் டிவிசன் என்னும்
மேலதிகாரியிடம் - ஆமாம்
நான் சுட்டுக்கொன்றேன் என் வெறி
தீரும்வரை சுட்டுக்கொன்றேன்
பஞ்சாப் மக்களுக்கு குலைநடுக்கத்தை
ஏற்படுத்தவே சுட்டேன் - மேலும்
என்னுடன் படையினரும் ஆயுதங்களும்
இருந்திருந்தால் மேலும் கூடுதலான
கொலைகளை செய்திருப்பேன் என்று
திமிராக நெஞ்சை நிமிர்த்தி
வாக்குமூலம் அளித்தானாம்....

இதுமட்டுமல்ல இன்னும் பல
உயிர்களையும் பல தலைவர்களையும்
இழந்துதான் நாம் நமக்கான
சுதந்திரத்தை பெற்றோம்...

பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும்
அலுவலகங்களிலும்
ஒரு நாள் வழங்கப்படும்
விடுமுறையும் இனிப்புக்களும்தான்
சுதந்திரம் என்று நினைத்துவிடாதிர்கள்
இந்த சுதந்திரத்தை பெற நாம்
எவ்வளவு இழப்புகளை
சந்தித்து இருக்கிறோம் என்று
நினைத்து பாருங்கள் நண்பர்களே....

அடக்குமுறைகளாலும்
வன்முறைகளாலும்
அவஸ்தைக்குள்ளாகி போன
மக்களுக்கு
புறத்தில் அழுது
அகத்தில் சிரிக்கும்
அரசியல்வாதிகளால்
நம் சுதந்திரம்
பறிபோகிறது...

வெள்ளைகாரர்களிடம்
சுதந்திரத்தை வாங்கி
கொல்லைகாரர்களின்
கையில் கொடுத்துவிட்டோம்!
உனக்கான சுதந்திரம்
உனக்கே தெரியாமல்
பறிக்கப்பட்டு கொண்டு
இருக்கிறது....

உடனே விழித்துகொள்!
முன்னோர்களின்
பெயர்போற்று - உன்
சுதந்திரத்தை முழுசாய்
கைப்பற்று...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (14-Aug-11, 1:29 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 1039

மேலே