அவளழகு

நிலவொத்த உன் முகத்தைப் பார்ப்பேனா
இல்லை மருளும் உந்தன் மான் விழிகளை பார்ப்பேனா
அமுதூறும் உந்தன் இதழ்களைப்பார்ப்பேனா
நாணத்தைக் காட்டும் அந்த உந்தன் நாசியின்
சின்ன அசைவு ......இப்படி பார்க்கையிலே -நீ
மெல்ல மெல்ல அசைந்துவந்தாய் வஞ்சிக்கொடியே
சின்ன யானைப்போல-இப்படி உந்தன் அழகில்
ஒன்றைப்பார்க்க ஒன்றுமிஞ்ச , ஓவியனாய் மாறி
என்னவளே நான் பார்த்த உன் உருவத்தில் மிதந்துவந்த
அழகை காட்ட இதோ வரைந்திருக்கிறேன் பார்
சித்திரங்கள் உந்தன் அழகின் வண்ணக்கோலங்கள் இவை
ஒவ்வொன்றும் தனித்தனி அங்க இலக்கணமடி-உந்தன்
'சாமுத்திரிகா லட்சணம்'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jun-18, 12:07 pm)
பார்வை : 90

மேலே