உமை நாடகம்

அன்பே
அந்தி நேரம் கழிந்த பிறகு
இந்த நாடகம் அரங்கேற்றமாக
அவசியம் ஏனோ?

கட்டி வைத்திருந்த கற்றை கூந்தல்
காற்றோடு ஈரம் சொட்டி கலையும்
இந்த மாயம் ஏனோ?

ஒதுங்காத கருவிழிகள்
ஓரங்கட்டிக் கொண்டு
அ(னை)ழைக்க தூண்டுவது ஏனோ?

மனம் வருடிய மௌனங்கள்
மலர்வாடி வெளிவர
மகிழ்ந்து தவிப்பது ஏனோ?

மன்னன் வரும் வரை
தாழிட்டு வைத்த கதவுகள்
திரைமறைவின் ஓரம்
திரும்பி சென்றது ஏனோ?

ஊடல் கொண்டு சென்றவனிடம்
கூடல் கொள்ள
துள்ளி தவிப்பது ஏனோ?

உறவை கொடுத்தவனிடம்
உள்ளத்தை சமர்பிக்க
உணர்வுகள் போடும்
ஊமை நாடகம் இதுவென்று
உயிரே
உனக்கு புரியவில்லையோ...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (23-Jun-18, 7:00 pm)
Tanglish : umai naadakam
பார்வை : 315

மேலே