மெளனம்

மெளனம்.

இயலாமை,
ஆற்றாமை,
வலிமை ,
பணபலம் இல்லாமை,
உடையோர் எல்லாம்,
சூல் நிலை எது எப்படி
என்று பாராது,
மெளனம் காத்திடல்,
சிறப்பு வழி,
எழுத்தில் வாராத மொழி.
மனனம் தவிர்க்கும் மொழி.

மெளனம்........
வலிமையுடைய வல்லோர்க்கு,
பொருந்தாது.
வலிமையுடைய நல்லோர்க்கு,
பொருந்தும்.

உயரிவர்கள், உரியவர்கள்
ஒரு போதும் சப்திப்பதில்லை,
நாளைய நன்மை அறிந்தோர்,
நலம் தெரிந்தோர் அமைதி காப்பர்.

அமைதி காப்பது அறிவுடமை,
அமைதி என்பது நிதர்சனம்,
அமைதி என்பது ஆழ் மனம்,
அமைதி ஆள்பவர் அரசரே.
பழகி பார்க்க, பெற்றிடலாம்
கோடி நன்மை.

அறிந்தோ, அறியாமலோ,
புரிந்தோ, புரியாமலோ,
மெளனம் காக்க ,
அதுவே சம்மதம் என்று
புரிந்தவர்களும் உண்டு.

எழுதியவர் : arsm1952 (24-Jun-18, 3:41 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 101

மேலே