காமப் பிசாசு......
கட்டுப்படாமலும்
கைக்கெட்டாமலும் தூரமாய்
நின்று கள்ளச் சிரிப்புச்
சிரிக்கும் இந்தக் காமமதை
கைக்கடக்கவென என்
எல்லா விழைவுகளையும்
ஒற்றை மூச்சில் விழுங்கியபடி
என் பின்னால் மூச்சிரைக்க
ஓடி வரும் இந்த மூர்க்கக்
காமத்தை நோக்கி என் ஒரே
கேள்வி ........?
வெள்ளுடல் மங்கைக் காண
விறைப்பாய்
எழுந்து விடும் என்
எல்லா நரம்புக்குள்ளும்
பொங்கி நிற்கும்
காமமதை நிரப்ப
எத்தனை யுகங்கள்
எடுத்துக் கொண்டாய்.............?
என்னை கவிழ்க்கவும் கூட...........?