மருத நிலத்து மரிக்கொழுந்தே

கண்டாங்கி சேலை கட்டிக்கிட்டு
கைவளையலை குலுக்கி குலுக்கி
வரப்பு மேலே நடந்து வரும் பொன்னம்மா - உன்
அழகை சொல்ல வார்த்தை இல்லை பொன்னம்மா

அந்தி சாயும் நேரத்திலே
கண்ணு ரெண்டையும் உருட்டிக்கிட்டு
கிட்ட வந்து சிரிக்கும் பொன்னம்மா - நீயென்
கீழ்மனதில் புகுந்து விட்ட பொன்னம்மா

புருவமெல்லாம் உயர்த்திக் கிட்டு
கீழுதட்டை கடிக்கும் போது
ஆசை பொங்கி வழியுதடி மாமனுக்கு -அதை
ஆசையாக பாடி விட்டேன் நான் உனக்கு

ஆத்தோரம் போகையிலே ஆடி மகிழ்ந்து
ஆலமரத்து நிழலிலே ஓடி வந்து
அணைத்துக் கொண்ட என் செல்லமே - இந்த
ஆலமரமும் நம் காதல் கதையை சொல்லுமே

காலம் தள்ளிப் போனாலும்
காத்திருக்க வேண்டும் பொன்னம்மா
மஞ்சள் தாலி எடுத்து வந்து உன்னை நானும்
மணமுடிப்பேன் பொன்னம்மா

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 10:33 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 77

மேலே