காவிய கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் ---------எந்த நிலையிலும் இவருக்கு மரணமில்லை கண்ணதாசன்

புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான கண்ணதாசன் 1927-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி தமிழ்நாடு மாநிலம் சிறுகூடல் பட்டியில் பிறந்தார். இவருடைய தந்தை சாத்தப்பனார் தாய் விசாலாட்சி ஆச்சி. இவருடன் உடன் பிறந்தோர் 8 பேர். சிறுவயதிலேயே இவரை ஒருவர் 7000-க்கு தத்து எடுத்து வளர்த்தார். அவருடைய வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வளர்ந்தார். எட்டாம் வகுப்பு வரை படித்த கண்ணதாசன் 1943-ஆம் ஆண்டு திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
-------------------
: உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சிங்காரமாக சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

கவிஞரை நினைவு கூர்ந்து ஐரோப்பிய கண்ணதாசன் ரசிகர்கள் பகிர்ந்து கொண்ட ஒரு பிளாஷ் பேக் பதிவு:

தமிழ் எழுத்துலகில் ஆரம்பித்து திரை உலகத்திலே புகுந்து கலைவாணி இட்ட கட்டளையை கட்சிதமாக செய்து முடித்த ஒரே கவியரசன் என்ற பெயருக்கு தகுதியானவர். இவர் வருகைக்கு பின்புதான் திரையுலகத்திலே பாடல்கள் பெருமை பெற்றன. இன்றுவரை இந்தக்கவியரசை வெல்ல ஒருவரும் வரவில்லை.

திரை உலகில் பெயர் பெற்றாலும் தன் தமிழ்ப்பற்றையும் சரியான முறையிலே பதிவு செய்தவர். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது தொடங்கி, அங்கு தமிழருக்கு இன்னல்கள் ஏற்பட்டபோதெல்லம் குரல் கொடுத்தவர் கவியரசர்.

தமிழர்கள் மரபிலே எத்தனையோ கவிஞ்ர்கள் தோன்றி மறைந்திருக்கின்றர்கள். ஆனாலும் தமிழர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தன்னுடைய எழுத்துக்களை, பாடல்களை, படைப்புக்கள் வழங்கியவர் கண்ணதாசன். அவர் எழுத்துக்களில் இதுதான் சிறந்தது என்று சொல்லிவிட முடியாது எல்லா எழுத்துக்களும் ஒவ்வொரு தரப்பினர்க்கும் அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றால் போல் அமைந்ததுதான் கண்ணதாசனின் சிறப்பு.

"அர்த்தமுள்ள இந்துமதம்".. இது ஒரு உபயோகமுள்ள வாழ்க்கைக்கு அர்த்தத்தை சொல்லித்தரும் அற்புதமான காலக் களஞ்சியம். தனி ஒரு மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அவரவர் சந்திக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் இன்பமாகட்டும், துன்பமாகட்டும், காதல், பிரிவு, கடமை, தொழில், சோதனகள், வேதனைகள் ஏற்பட்டாலும் அங்கே ஆறுதல் சொல்வது போல் இவரது பாடல்கள் வந்து துணை நிற்கும். இது தான் கண்ணதாசனின் சிறப்பு.

''நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'' என்று சொன்னது போலவே இன்றும் வாழ்ந்து கொண்டு மற்றவர்க்கு தனது பாடல்களால் ஆறுதல் தந்து கொண்டிருக்கும் கவியரசரே நீங்கள் இந்தத் தமிழ் உலகம் வாழும் வரை வாழ்வீர்கள்.
--------------------

கோவலன் யார்?.. கண்ணதாசன் அளித்த அதிரடி தீர்ப்பை பாருங்க!

மிகப்பெரிய ஞானக்கடல் கண்ணதாசன். எனவேதான் கவியரசரின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றுமே சுவாரஸ்யங்கள் கொண்டது. அந்த கடலின் ஒரு துளி இது...

பல்வேறு தொடர்ச்சியான நிகழ்ச்சிகளில் கண்ணதாசன் கலந்து கொண்ட நேரம் அது. அதனால் ரொம்ப டயர்டாகவே இருந்தார். அப்படித்தான் ஒரு பட்டிமன்றத்திலும் கலந்து கொள்ள நேர்ந்தது. நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது விழா ஏற்பாட்டாளர்களிடம், "எவ்வளவு பேர் பட்டிமன்றத்தில் பேச இருக்கிறார்கள்" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "அந்தஅணியில் 3 பேர். இந்த அணியில் 2 பேர், கடைசியாக நீங்கள்" என்றார்கள்.

ஓ அப்படியா என்று கேட்டுவிட்டு, முதல் பட்டிமன்ற பேச்சாளர் பேச ஆரம்பிக்கும்போதே மேடையில் தூங்க ஆரம்பித்துவிட்டார். அவரது அணிக்காரர்களுக்கோ கலக்கம், என்னடா இது? கவிஞர், தூங்கறாரே, மற்றவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். பேசுவதை குறிப்பெடுத்து வைத்து கொண்டால்தானே அதை வைத்து பேச முடியும். எதிரணிக்கு பதிலளிக்கவும் முடியும்?" என்று மண்டையே காய்ந்துவிட்டது.

எல்லோரும் பேசி முடித்து கவிஞர் பேச வேண்டிய நேரம் வந்தது. அருகில் சென்று எழுப்பினார்கள். அடுத்ததாக பேச போவது கவிஞர் கண்ணதாசன் என்று அறிவித்தும் விட்டார்கள். கண்விழித்த கவிஞர், ஒருகணம் திரும்பி விழாமேடையின் பின்னால் வைக்கப்பட்டிருந்த பட்டிமன்ற தலைப்பு என்னவென்று அப்போதுதான் பார்த்தார்.

"கோவலன் செட்டியாரா? வேறு இனத்தவனா?" என்பது பட்டிமன்ற தலைப்பின் பெயர். அதற்கு முன்பு எந்த அணியினர் என்ன பேசிவிட்டு போனார்கள் என்றுகூட தெரியாது. இப்போது, கவிஞர் பேசினார்... "கோவலன் என்னைக்கு கட்டின பொண்டாட்டியை விட்டுவிட்டு வேறு ஒருத்தியை தேடி போய்ட்டானோ, அப்பவே அவன் "செட்டியார்"னு ஆயிடுச்சு இல்லை? இதுக்கு எதுக்கா ஒரு பட்டிமன்றம்?ன்னு முடிவையே சொல்லிட்டு போய் உட்கார்ந்து விட்டாராம்!

எழுதியவர் : (25-Jun-18, 8:38 am)
பார்வை : 131

சிறந்த கட்டுரைகள்

மேலே