தோழிகள் -தொலைவால் பிரிவில்லை

கலையாத கனவுகள் தான் என் தோழிகள்
உறவுகளைத் தாண்டியும் ஓர் உன்னதம்
முவ்வுயிர்களிடையே ஓர் பந்தம் புரியாவயதிலிருந்தே
கலங்கமில்லா கண்களுடைய கன்னிகள்
வாழ்வின் வழிகளை வசந்தமாக்கக் கற்றவள்கள்
பாதையோடு நில்லாது உள்ளத்தில் பத்திரமானவள்கள்
உல்லாச உலா தான் ஊரில் என்றும்
சிறு சேட்டைகளும் பாசமும் புன்னகைப்பூவும்
அழகுதான் ஆரம்பக் கல்விக்கு
பூப்பெய்தியதால் புறப்பட்டாள் ஒருத்தி
முவ்வுயிரும் முகம் காணமுடியாமல் போனது
தொலைவே பிரிவாயினும் மனம் இன்றும்
ஏந்தும் எங்கள் தோழமையை
அழியா நட்பிற்கு அச்சாரமே எங்கள் ஆசான்தான்

எழுதியவர் : கயல் அமுது (27-Jun-18, 8:04 am)
பார்வை : 367

மேலே