கைகள் இல்லை (காப்பாற்ற )
இடம் பெயரும் நிலையினிலே
இறந்தவர் எத்தனை பேர்
இழந்தவர் எத்தனை பேர்
ரத்தத்தில் தமிழ் கலந்த ஒரே காரணத்தினால்
ரத்த வெள்ளத்தில் நம் மக்கள்
ஓலக்குரல் சத்தம் அடங்கவில்லை
ஒரு இரவும் நாம் தூங்கவில்லை
வலது கையில் எழுதும் கவிதையை
இடது கையில் எழுதுகிறேன் இன்று
அன்று குண்டுவெடிப்பில் குறைந்தது
என்னுடன் கைகள் இழந்தவர்கள் இருபது பேர்