தமிழை வளர்த்திடலாம் வாருங்கள் தாய்மார்களே

செந்தமிழ்நாட்டு இளம்
தமிழ்த் தாய்மார்களே
உங்கள் சிறு குழந்தைகளுக்கு
வளரும் பருவத்துலேயே
தாய்ப்பாலுடன் தேன்
தமிழ்ப்பாலையும் கலந்தூட்டிட
ஏனம்மா தயக்கம் -
கிண்ணத்தில் பால் சோரேந்தி
முற்றத்திற்கு வந்து
நிலாச்சோறு ஊட்டிவிட
நம் தமிழில் ஆயிரம்
சுவைப் பாடலிருக்க
வெள்ளையன் விட்டுச்சென்ற
ஆங்கிலத்து 'ஓ,லுக் அட் தி மூன்'
ரைம் எதற்கம்மா நீயே சொல்லு
சீனர்கள்,யப்பானியர்,ஜெர்மானியர்
பிறவிமுதல் தம் மொழியில்தான்
குழவிக்கு தாய்மொழி கற்றுத்தர
நமக்கு மட்டும் ஏன் இந்த
வேற்றுமொழி மோகம்...........

இளம் தாய்மார்களே இன்று முதல்
பழகுங்கள் தேனினும் இனிய நம்
தாய்மொழியிலேயே வீட்டில்
பேசி,எழுதி, படித்து பிள்ளைகள் வளர
தாயை'மம்மி' என்றும் தந்தையை
'டாடி' என்பது போய் , அன்றுபோல்
'அம்மா'; 'அப்பா என்றே கூப்பிட
பழக்கிவிடுங்கள் ..........
பெரியவராக வளரும்போது
பிள்ளைகளுக்கு, வள்ளுவன்
கம்பன்.அவ்வை, பாரதி ஆகிய
மாகவிஞர்களின் கவிதையை
பாடி படித்து மகிழ செய்திடுவீர்
பிள்ளைகளுக்கு தமிழில்
தாலாட்டுப் பாட பழகிடுவீர்
தாயல்லவா நம் தமிழ்நாடு
கன்னியல்லவா நம் மொழி 'தமிழ்'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Jul-18, 9:38 am)
பார்வை : 430

மேலே