பாசத்தோடு ஒரு வாழ்க்கை

அழகிய தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து வாழும் ஒருவர்க்காக ஒருவர்
வாழ்ந்து வருபவர்கள்.அவர்களை
இந்த ஊரே வியந்து பார்க்கும்
நடுத்தர குடும்பம் கௌரவம் என்ற ஒன்றை உயிர் என நினைத்து வாழ்ந்தனர்.அவர்களுக்கு இரு
ஆண் மகன்கள்.படிப்பில் ஆர்வம்
மிகுந்த மூத்த மகன் ஆதவன்.
இளைய மகனும் படிப்பில் ஆர்வம் மிகுந்தவர் பெயர் நந்து.
அழகான குடும்பம் ஆதவன் தன் நிலை அறிந்து படிப்பில் பட்டம் முடித்து வேலைக்கு சென்றான்.
நந்து தன் பட்ட படிப்பின் போது
கல்லூரியில் ஒரு பெண்ணுடன் காதல் வசப்பட்டு அம்மா, அப்பாவுக்கு
எதிராக போராடி திருமணம் செய்து கொண்டான்.
ஆதவன் தன் தம்பி நிலையினை கண்டு பெற்றோர்கள் கவலையில் இருப்பதை உணர்ந்து தன் வாழ்வில் திருமணம் வேண்டாம் என முடிவு செய்தான்.
தன் பெற்றோருடன் வாழ வேண்டும் அவர்கள் போதும் எனக்கு என சிந்தனை செய்து முடிவு செய்தான். அவர்களும் ஆதவனோடு வாழ்ந்து வந்தனர்.
சில காலங்கள் கழித்து விட
ஆதவனின் பெற்றோர் ஒரு திருமணம் செய்து கொள்.
எங்களுக்கு வயது ஆகி கொண்டே
போகிறது.உனக்கு ஒரு துணை வேண்டாமா? உனக்கு அடுத்து உன் சந்ததி வர வேண்டும் உன்னோடு இந்த தம் தலைமுறை முடிந்து போகும் கூடாது என வற்புறுத்தி
பெண்கள் பார்க்க ஆரம்பித்தனர்.
ஆதவனின் ஒரு நிபந்தனை ஒற்று கொண்டால் தான் திருமணம்.
அது என்னவென்றால் தன் பெற்றோர்கள் தன்னுடன் தான் இருப்பார்கள் எந்நிலையிலும் எந்த சூழலிலும் என்றான்.
பெண்கள் பார்க்கும் படலம் தொடர்ந்து கொண்டே போனது
இறுதியில் சொந்தகாரர் மூலம்
வளர்க்க பட்ட ஒரு பெண் பெற்றோரை இழந்தவள்.அவள் அந்த நிபந்தனைகளுக்கு ஒப்பு கொண்டாள்.மேலும் திருமண எளிமையாய் ஒரு ரூபாய் வரதட்சணை வாங்காமல் திருமணம் நடந்தது.
அவளும் தன் புகுந்த வீட்டிற்கு வந்து
வாழ ஆரம்பித்தாள்.
தன் அத்தை,மாமாவை தன் அப்பா அம்மா போல் கவனித்து கொண்டாள்.
ஆதவன் தன் பெற்றோருடன் தன்
மனைவியுடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்தான்.
சிறிது காலம் கழிய அவனுக்கு இரு பிள்ளைகள்.தன் தாத்தா, பாட்டி
சொல்லும் கதை கேட்க வளர்த்தனர்.
குடும்பத்தில் இன்பம் மட்டுமே நீடித்தது.திடீரென ஆதவனின் அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
அந்த நிலையிலும் ஆதவனின் மனைவி தன் தந்தையை கவனிப்பது போல கவனித்தாள்.
அவரின் நிலை மோசமாக ஆதவனின் தந்தை உயிர் பிரிந்தது.
தன் தந்தைக்கு இறுதி கடமைகள் செய்து அவரை வழி அனுப்பினார்
ஆதவன்.
தன் பிள்ளைகள் தன்னை வாழ்நாள் முழுவதும் தாங்குவார் என் நினைக்கும் பெற்றோரின் உள்ளம்
நெகிழ ஆதவன் இருந்தான்.
தந்தை இழப்போடு அவன் தாய்யையும் சிறிது காலத்தில் இழந்தார்.
பெற்றோர்களை தெய்வமாக மதித்து
ஆதவன் தன் கடமைகளை முடித்து
தன் வாழ்க்கையை வாழ்ந்தான்.

ஆதவனை போல பிள்ளைகள் பெற்றோரை வணங்கி வாழ
முதியோர் இல்லங்கள் இல்லா உலகம் இருக்கும்.
தன் பிள்ளைகள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வார்களா?இல்லையா?
என ஏங்கும் பெற்றோரின் நிலையை யோசித்து பாருங்கள்.....
பேரன் பேத்தி என அவர்களை வாழ
விடுங்கள்......
பணத்தை தேடி பாபங்களை இழந்து
வாழாதீர்கள்.........

எழுதியவர் : உமா மணி படைப்பு (4-Jul-18, 2:18 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 377

மேலே