கம்பன் விழா 2018

கற்கண்டு சொற்குவியல் இனிதே
சுவைக்க உண்டு
கள்ளிருக்கும் நனிமலர் குவியல்
கவிதை உண்டு
கற்றவர் கற்பவர் மனம்
மகிழ்வால் விண்டு எட்டும்
கர ஒலியால் அரங்கம்
அதிர்வு கண்டு
கவின்மிகு சீர் கலைவிழா
சிறக்கட்டும் நன்று.!
காலத்தின் நினைவில் நீங்கா
நிலை கொண்டு உய்யட்டும்
கம்பன் கழகம் ஆற்றும்
தமிழ்த் தொண்டு!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (7-Jul-18, 7:25 am)
சேர்த்தது : Vivek Anand 354
பார்வை : 40

மேலே