விதிவசம்

அந்நிய ராலே அடிமைத் தனமாய் அழுதிருந்தோம்
சிந்திய செம்புனல் செம்மண் குடிக்கச் சிதைந்திருந்தோம்
உந்திய வீரம் உயிர்பெற நாமும் உயர்வடைந்தும்
வெந்தணல் பட்ட விறகென றானோம் விதிவசமே

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Jul-18, 10:25 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 82

மேலே